||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 102 - பார்த்தனுக்கு சாரதியானவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
போர் ஒக்கப் பண்ணி* இப் பூமிப் பொறை தீர்ப்பான்*
தேர் ஒக்க ஊர்ந்தாய்!* செழுந்தார் விசயற்காய்*
கார் ஒக்கும் மேனிக்* கரும் பெருங் கண்ணனே!*
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ*
ஆயர்கள் போரேறே! அச்சோ அச்சோ!
- இப் பூமி - இந்தப் பூமியினுடைய
- பொறை - பாரத்தை
- தீர்ப்பான் - தீர்ப்பதற்காக
- போர் - யுத்தத்தை
- ஒக்க - கௌரவர்களோடு ஸமமாக
- பண்ணி - செய்து
- செழு - செழுமை தாங்கிய
- தார் - தும்பை மாலையை அணிந்துள்ள
- விசயற்கு ஆய் - அர்ஜுநனுக்காக
- தேர் - அவனுடைய தேரை
- ஒக்க - எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஈடாகும்படி
- ஊர்ந்தாய் - பாகனாய்த் தேரைச் செலுத்தினவனே!
- கார் ஒக்கும் - மேகம் போன்ற நிறமுடைய
- மேனி - திருமேனியில்
- கரும் பெருங் - கரிய பெரிய கண்களை உடைய
- கண்ணனே - கண்ணழகனே!
- வந்து - ஓடி வந்து
- ஆர - நெஞ்சார
- தழுவா - தழுவி
- அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
- ஆயர்கள் - இடையர்களுக்கு அடங்கி நிற்கின்ற
- போர் ஏறே - போர் செய்யும் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே!
- அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!
இந்த பூமியின் பாரத்தை தீர்ப்பதற்காக பல யுத்தங்களைப் புரிந்தவனும், சிறந்த மாலைகளை அணிந்தவனான அர்ஜுநனுக்காக தேரோட்டியானவனும், மேகம் போன்ற திருமேனியில் விசாலமான கரிய கண்களை உடையவனுமான கண்ணனே! என்னை கட்டியணைக்க ஓடி வர வேண்டும். ஆயர்களின் காளையே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment