||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.14
ஸூத உவாச|
த்³வாபரே ஸமநு ப்ராப்தே
த்ருதீயே யுக³ பர்யயே|
ஜாத: பரா ஸ²ராத்³ யோகீ³
வாஸவ்யாம் கலயா ஹரே:||
- ஸூத உவாச - ஸூதர் கூறுகிறார்
- யுக³ பர்யயே - யுகக் கணக்கில்
- த்ருதீயே த்³வாபரே - மூன்றாவதான துவாபர யுகம்
- ஸமநு ப்ராப்தே - ஏற்பட்ட அளவில்
- வாஸவ்யாம் - வாஸவி என்கிற சத்யவதியிடம்
- பரா ஸ²ராத்³ - பராஸர மஹரிஷிக்குப் புத்திரராக
- ஹரேஹே கலயா - ஸ்ரீ ஹரியினது
- யோகீ³ - ஞானியான வியாஸர்
- ஜாதஃ - தோன்றினார்
ஸூதர் கூறுகிறார்: யுகங்களின் வரிசையில் மூன்றாவதான துவாபரயுகக் கடைசியில், உபரிசரன் என்ற வசுவின் மகளான வாஸவி என்கிற சத்யவதியிடம் பராஸர மஹரிஷிக்குப் புத்திரராக, பகவான் வாசுதேவரின் அம்சத்துடன் பரம ஞானியான வியாஸ பகவான் தோன்றினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment