||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 99 - பஞ்ச பாண்டவர் தூதன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பஞ்சவர் தூதனாய்ப்* பாரதம் கை செய்து*
நஞ்சு உமிழ் நாகம்* கிடந்த நற் பொய்கை புக்கு*
அஞ்சப் பணத்தின் மேல்* பாய்ந்திட்டு அருள் செய்த*
அஞ்சன வண்ணனே! அச்சோ அச்சோ*
ஆயர் பெருமானே! அச்சோ அச்சோ!
- பஞ்சவர் - பாண்டவர்களுக்காக
- தூதன் ஆய் - துர்யோதநாதிகளிடம் தூதனாய்ப் போய், அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்
- பாரதம் - பாரத யுத்தத்தை
- கை செய்து - அணி வகுத்துச் செய்து கை கொடுத்தவனும்
- நஞ்சு - விஷத்தை
- உமிழ் - கக்குகின்ற
- நாகம் - காளீய ஸர்ப்பம்
- கிடந்த - இருந்த
- நல் பொய்கை - கொடிய தடாகத்திற்குள்
- புக்கு - புகுந்து
- அஞ்சு - ஆய்ச்சிகளும் ஆயரும் பயப்படும்படி
- பணத்தின் மேல் - அப் பாம்பின் மேல்
- பாய்ந்திட்டு - குதித்து நடமாடி அக் காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க
- அருள் செய்த - அப் பாம்பின் ப்ராணனைக் கருணையால் அருள் செய்த
- அஞ்சன வண்ணனே! — மைபோன்ற அழகனே!
- அச்சோ! அச்சோ! — என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்
- ஆயர் - இடையர்களுக்கு
- பெருமானே - தலைவனானவனே!
- அச்சோ! அச்சோ! — என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!
பஞ்ச பாண்டவர்களுக்காக துர்யோதனாதிகளிடம் தூதனாய்ப் போனவனும், பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்படாததால் பாரத யுத்தத்தை அணிவகுத்து செய்தவனும், விஷத்தைக் கக்கும் காளியன் என்கிற ஸர்ப்பத்தை, ஆயர்கள் பயப்படும்படி, மடுவிலே புகுந்து அதன் தலை மேலே நடனமாடி அடக்கி, பின்பு தனது கருணையால் அதற்கும் அருள் புரிந்த, மை போன்ற நிறம் உடையவனுமான கண்ணனே! என்னை அணைத்துக் கொள்ள வர வேண்டும், ஆயர்களின் தலைவனே, அணைத்துக் கொள்ள வர வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment