||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அக்ருரன் கிருஷ்ணன் சந்திப்பு|
அக்ருரன் மிகவும் சந்தோஷத்துடன் கிருஷ்ணனை சந்தித்து ஆசி பெற விரும்பினான், எனத்தான் கம்சன் அனுப்பினாலும், அக்ருரருக்கு ஆசி பெறுவதே முக்கியமாக தோன்றியது, இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் தவித்தார், அவருக்கு கிருஷ்ணன் கடவுள் என்று முன்பே தெரியும். அதிகாலையில் ரதத்தில் ஏறி பிருந்தாவனத்திற்கு புறப்பட்டார், அங்கு சென்றடைய மாலை ஆகிவிட்டது, நந்தரின் வீட்டு வாசலுக்கு வந்ததும் கிருஷ்ணனை காண ஆவலாக நின்று கொண்டிருந்தார். கிருஷ்ணரின் கால் பாதத்தை தரையில் கண்டதும் பெரு மகிழ்ச்சி அடைந்து மண்ணை தொட்டு வணங்கினர். பால் கறக்கும் முற்றத்தில் கிருஷ்ணனும் பலராமனும் நின்று கொண்டிருந்தனர்.
கிருஷ்ணன் நீல நிற ஆடையும், பலராமன் மஞ்சள் நிற ஆடையும் அணிந்து இருந்தனர், ஒருவரின் முகம் நிலவை போல அழகாய் இருந்தது, மற்றொருவர் முகம் மழை மேகம் போல இருந்தது, இருவர் முகமும், கண்களும் இரக்கத்துடன் அழகாக தோன்றியது. அக்ருரரால் அவரது சந்தோஷத்தை வெளிபடுத்த முடியவில்லை. அவரது சந்தோஷத்தால் அவர் நெஞ்சம் வெடிப்பது போல தோன்றியது. அக்ருரன் இருவரின் பக்கம் ஓடி சென்று அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினர். அவர் கண்களில் இருந்து நீர் ததும்பியது. கிருஷ்ணன் மரியாதையுடன் அவரை தூக்கி கட்டி அணைத்துக் கொண்டார். அவருடைய கைகளை இருவரும் பிடித்து கொண்டு, அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அக்ருரருக்கு கிருஷ்ணனின் வீட்டில் ஏக போக மரியாதை தான், பலமான விருந்து ஏற்பாடு செய்யபட்டது.
இருவரும் அவரை மெத்தையில் அமர சொன்னார்கள், அக்ருரன் அவரது வாழ்க்கை ஆசீர்வாதம் பெற்றதாக நம்பினார், கிருஷ்ணன் அவரது மெல்லிய குரலில் "இனிய நண்பனே, உங்களது பயணம் இனிமையாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன், மதுராவில் உள்ள எனது சொந்தங்கள் அனைவரும் நலமா? எங்கள் இருவரால் எங்கள் பெற்றோர் மிகவும் துன்பத்தை அனுபவித்தனர், சிறையில் இருந்து துன்புற்றனர். நீங்கள் எதாவது முக்கியமான காரணமாக வந்திர்களா?" என்றார்.
கம்சன் யாதவர்கள் மேல் வைத்துள்ள பகையை பற்றி அக்ருரன் எடுத்து உரைத்தான், வசுதேவரை கொள்ள முயற்சித்ததையும் கூறினார். "கம்சன் உங்கள் இருவரையும் கொள்ள திட்டம் தீட்டுகிறான், அவன் தனுர்யாகம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறான். வில் வழிபாடு விழாவை, காரணமாக வைத்து உங்கள் இருவரையும் மதுராவுக்கு அழைத்து வர சொல்லி இருக்கிறான், சில மல்யுத்த வீரர்களை ஏற்பாடு செய்துள்ளான், அவன் உங்களை கொள்ள விருப்பப் படுகிறான், நந்தரையும் உங்களுடனயே அழைத்து வர சொல்லி இருக்கிறான்" என்றார் அக்ருரன்.
இதை கிருஷ்ணன் புன்சிரிப்புடன் கேட்டு கொண்டு அவருடன் வர சம்மதித்தார். நந்தர் பசும்பாலினை எடுத்து வந்து கம்சனுக்கு தர விருப்பப் பட்டார். "நாம் நாளை காலை மதுராவுக்கு புறப்படலாம். அப்போது தான் நம்மால் வில் விழாவில் கலந்து கொள்ள முடியும்" என்று அக்ருரன் கிருஷ்ணனிடம் கூறினார். அவருடைய ஊர் முழுவதும் தண்டோரா போட்டு இவர்கள் மதுரா செல்லும் விஷயத்தை தெரிவிக்குமாறு நந்தர் கட்டளையிட்டார்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment