||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 105 - மார்பில் மச்சம் உடையவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கண்ட கடலும்* மலையும் உலகு ஏழும்*
முண்டத்துக்கு ஆற்றா* முகில் வண்ணா ஓ! என்று*
இண்டைச் சடை முடி* ஈசன் இரக் கொள்ள*
மண்டை நிறைத்தானே! அச்சோ அச்சோ*
மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ!
- கண்ட - கண்களுக்குப் புலப்படும்
- கடலும் - ஸமுத்ரங்களும்
- மலையும் - மலைகளும்
- உலகு ஏழும் - கீழ் ஏழ், மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்கள் ஆகிய எல்லாவற்றையும் இட்டு நிறைக்கப் பார்த்தாலும்
- முண்டத்துக்கு - என் கையிலிருக்கிற ப்ரஹ்ம கபாலத்துக்கு
- ஆற்றா - போதாததாக இருக்கின்றன
- முகில் வண்ணா - மேக வண்ணனே!
- ஓஒ! - ஓஒ! ஹாஹா!
- என்று - என்று உரக்கக் குரல் கொடுத்துகூப்பிட்டு
- இண்டை-நெருங்கின
- சடை முடி - ஜடா முடியை உடைய
- ஈசன் - ருத்திரன்
- இரக்கொள்ள - யாசிக்க
- மண்டை - அவன் கையிலிருந்த ப்ரஹ்ம கபாலத்தை
- நிறைத்தானே - மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால் நிறையச் செய்தவனே!
- அச்சோ அச்சோ- என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
- மார்வில் - திரு மார்பிலே
- மறுவனே - ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை உடையவனே!
- அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!
பதினான்கு உலகங்கள், கண்கண்ட சமுத்திரங்கள் மற்றும் மலைகள் அனைத்தையும் வைத்து நிரப்பியும், சடைமுடியான் சிவனிடமிருந்த கபாலம் நிரம்பாததால், சிவன் மிக்க வருத்தத்துடன் எம்பெருமானை வேண்ட, எம்பெருமானும் தன் திருமார்பிலிருந்து உண்டான ரத்தத்தால் கபாலத்தை நிறைத்தான். இப்படியாக சிவன் துயர் தீர்த்தவனே! என்னை அணைத்துக் கொள்ள வர வேண்டும். திருமார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் மச்சமுடையவனே, அணைத்துக் கொள்ள வர வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment