About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 31 October 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபத்தி மூன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

063 அருள் ஆழங்கண்டேனோ நல்லானைப் போலே|

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் பரம பக்தன் அந்தணன் ஒருவன் காவிரி ஓடும் ஒரு ஊரின் நதிக்கரையில் வசித்து வந்தான்.

ஒருநாள், அவன் காவிரியில் நீராடிக் கொண்டிருந்த போது சடலம் ஒன்று நதியில் மிதந்து வருவதைப் பார்த்தான்.


அந்த சடலத்தின் தோள் பட்டையில் சங்கு, சக்கரம் ஆகியவை இருந்ததால், அது ஒரு வைஷ்ணவனின் சடலம் என, அதை எடுத்து இறுதிச் சடங்குகளை அவனே செய்தான்.

அந்த ஊர் மக்களுக்கு அது பிடிக்கவில்லை, அந்த சடலம் ஒரு தாழ்ந்த சாதி ஒருவனுடையது என்றும், அதற்கு இறுதிச் சடங்கை அந்தணனான அவன் செய்ததால், அவனை சாதியை விட்டு ஒதுக்கி வைத்தனர்.

அந்த அந்தணன், எம்பெருமானிடம், அவ்வூர் மக்களைத் திருத்தும் படி வேண்டினான்.

அடுத்த நாள் ஊர் மக்கள் கூடியிருந்த கோயிலில், எம்பெருமான் மக்களுக்கு, அந்த சடலம் ஒரு வைஷ்ணவருடையது அல்ல என்றும், ஆனாலும் அவனுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த அந்தணன் ஒரு நல்லான் (நல்லவன்) என்றும், அவனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு புரிய வைத்தார்.

எம்பெருமானின் சக்கரம் அருளாழி எனப்படும். நல்லான், அந்த சடலத்தின் அருளாழியையேப் பார்த்தான். இதன் மூலம் அவனுக்கு எம்பெருமான், மீதான அருளின் ஆழமும் தெரிந்தது. தவிர்த்து அன்பு என்பது எதிர்ப்பார்ப்புடன் வருவது. அருள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதது. நல்லான் அருளாழ்வம் கொண்டவன். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நல்லான் அருள் நிறைந்த உள்ளதோடு இறுதி சடங்குகளை செய்தான். எனவே, எம்பெருமானின் அருளுக்குப் பாத்திரமானான். ஸ்ரீமன் நாராயணனே “நல்லான்” என்று கூறியதால், அவரை மக்கள் “நல்லான் சக்ரவர்த்தி” என்று அழைத்தனர்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த நல்லானைப் போல நல்லுள்ளம் கொண்டு நான் அருளாழம் கண்டேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment