||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 78 - திருக்குடந்தையில் பள்ளி கொண்டவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்
தூ நிலா முற்றத்தே* போந்து விளையாட*
வான் நிலா அம்புலீ* சந்திரா! வாவென்று*
நீ நிலா நிற் புகழா நின்ற* ஆயர்தம்*
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி*
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி|
- வான் - ஆகாசத்திலே
- நிலா - விளங்குகின்ற
- அம்புலி - அம்புலியே!
- சந்திரா - சந்திரனே!
- தூ - வெண்மையான
- நிலா - நிலவொளி திகழும்
- முற்றத்தே - முற்றத்திலே
- போந்து - வந்து
- நீ - நீ
- விளையாட - நான் விளையாடும்படி
- வா - வருவாயாக
- என்று - என்று சந்திரனை அழைத்து
- நிலா - நின்று கொண்டு
- நின் - உன்னை
- புகழாநின்ற - புகழ்கின்ற
- ஆயர் தம் - இடையர்களுடைய
- கோ - தலைவராகிய நந்த கோபர்
- நிலாவ - மனம் மகிழும்படி
- சப்பாணி கொட்டாய் - சப்பாணி கொட்டி அருள வேணும்
- குடந்தை - திருக்குடந்தையில்
- கிடந்தானே! - பள்ளி கொண்டவனே
- சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
வெண்மையான நிலா காயும் முற்றத்தில் இருந்துகொண்டு வானில் உலாவும் சந்திரனை உன்னுடன் விளையாட அழைப்பதை இடையர்களின் தலைவரான நந்தகோபர் பெருமிதத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார் கண்ணா. அவர் மனம் குளிரக் கைககளைக் கொட்ட வேண்டும். திருக்குடந்தையில் பள்ளி கொண்டவனே! கைகளைக் கொட்டவும்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment