||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 102
ஆதா⁴ர நிலயோ தா⁴தா
புஷ்ப ஹாஸ: ப்ரஜாக³ர:|
ஊர்த்⁴ வக³ஸ் ஸத்ப தா²சார:
ப்ராணத³: ப்ரணவ: பண:||
- 950. ஆதா⁴ர நிலயோ - சாதுக்களுக்கு இருப்பிடமானவர். தங்கள் நீதியான செயல்களால் உலகை ஆதரிப்பவர்களின் இருப்பிடம்.
- 951. தா⁴தா - தர்மத்தை உபதேசிப்பவர். படைப்பவர்.
- 952. புஷ்ப ஹாஸஃ - மலர்கின்ற மலரைப் போலும் இனியவர். ஒரு பூவைப் போல பூக்கிறார்.
- 953. ப்ரஜாக³ரஹ - பக்தர்களின் பாதுகாப்பிற்காக இரவும் பகலும் விழித்திருப்பவர்.
- 954. ஊர்த்⁴ வக³ஸ் - மிகவும் உயர்ந்தவர். எல்லாவற்றிற்கும் மேலானவர்.
- 955. ஸத்ப தா²சாரஃ - பிறரை நல்வழிப்படுத்துபவர்.
- 956. ப்ராணத³ஃ - உயிரளிப்பவர்.
- 957. ப்ரணவஃ - தனது திருவடிகளைத் தொழுது எழச் செய்பவர். அவர் பிரணவ மந்திரத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார்.
- 958. பணஹ - நிலை மாற்றம் செய்பவர். தலைவனாக உள்ள தான் அடியவனாக இருந்து மகிழ்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment