About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 1 April 2024

திவ்ய ப்ரபந்தம் - 109 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 109 - எம்பிரான் கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

கிண்கிணி கட்டிக்* கிறி கட்டிக் கையினில்*
கங்கணம் இட்டுக்* கழுத்தில் தொடர் கட்டித்* 
தன் கணத்தாலே* சதிரா நடந்து வந்து*
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான்* 
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்|

  • என் கண்ணன் - என் கண்ணபிரான்
  • கிண்கிணி - இடுப்பில் அரைச் சதங்கையை
  • கட்டி - கட்டிக் கொண்டும்
  • கிறி - சிறுப் பவள வடத்தை
  • கையினிலே - முன் கையிலே
  • கட்டி - கட்டிக் கொண்டும்
  • கங்கணம் - தோள் வளையை
  • இட்டு - தோள்களில் சாத்திக் கொண்டும்
  • கழுத்தில் - திருக் கழுத்திலே
  • தொடர் - சங்கிலியை
  • கட்டி - அணிந்து கொண்டும்
  • தம் கணத்தாலே - இன்னும் அணிந்து கொண்டுள்ள மற்ற திருவாபரணங்களின் திரளோடு கூட 
  • சதிர் ஆ நடந்து வந்து - அழகாக, நளினமாக நடந்து வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • எம்பிரான் - என் பெருமான்
  • என்னைப்  - என்னுடைய 
  • புறம் புல்குவான்!  - முதுகை கட்டிக் கொள்வான்

கால்களில் கட்டிய கிண்கிணி என ஓசையெழுப்பும் சதங்கைகளோடும், கைகளில் கட்டிய சிறு பவள வடத்தோடும், திருத்தோள்களில் அணிந்த தோள்வளைகளோடும், கழுத்தில் சாத்திய சங்கிலியோடும் மற்றும் பலவித திருவாபரணங்களைச் சூட்டியவாறே கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! என் தலைவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment