||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அர்ஜுனனும் ஓர் அந்தணரும்|
துவாரகையில் ஓர் அந்தணர் இருந்தார். அவருடைய மனைவி ஒரு குழந்தையை ஈன்றாள். அது பூமியைத் தொட்டது தான் தாமதம், இறந்து போயிற்று. உடனே அந்த அந்தணர் குழந்தையை எடுத்துக் கொண்டு போய் அரண்மனை வாயிலில் வைத்துப் பின்வருமாறு புலம்பினார்.
"பிராம்மணர்களைப் பகைப்பவனும், வஞ்சகனும், லோபியும், சிற்றின்பத்தில் வாழ்பவனும் பெயருக்கு மாத்திரம் அரசனாக இருப்பவனுமான இவனுடைய கர்மதோஷத்தினால் என் குழந்தை இறந்து போயிற்று".
இப்படி வெகு நேரம் புலம்பிவிட்டு அவர் வீடு திரும்பினார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதுவும் பூமியைத் தொட்டதும் இறந்தது. திரும்பவும் அந்தணர் அரசனைப் பழி சொன்னார். இப்படியாக அவருக்கு ஒன்பது குழந்தைகள் பிறக்க, ஒன்பதும் பிறந்தவுடன் இறந்து விட்டன.
ஒன்பதாவது குழந்தையை வைத்துக் கொண்டு, அவர் அரசனை நிந்தித்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணனைப் பார்ப்பதற்காக வந்திருந்த அர்ஜுனன், அந்தணரின் குரல் கேட்டு அங்கே வந்தான். என்ன விஷயம் என்று விசாரித்தான். அவர் சொன்ன கதையைக் கேட்டு வருத்தப்பட்டான்.
அவன் அந்தனைப் பார்த்து, "அந்தணரே! நீர் சொல்லுவது போல, பிரஜைகள் படும் கஷ்டங்களுக்கு அரசன் தான் காரணம். தன் குடிமக்களைக் காப்பாற்றுவது அரசனின் கடமை. இல்லாவிட்டால் அவன் க்ஷத்திரியனாக இருக்க முடியாது. இப்பொழுது உள்ள க்ஷத்திரியர்கள் எல்லாம் யாகம் செய்யக் கூடியுள்ள அந்தணர்களைப் போலாகி விட்டார்கள். உமது அடுத்த குழந்தையின் உயிரை நான் காப்பாற்றுவேன். இல்லாவிட்டால் நெருப்பில் விழுந்து என் பாவத்தைக் கழுவுவேன்" என்று உறுதி அளித்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment