||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 86 - வாரணம் கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தொடர் சங்கிலிகை சலார் பிலார் என்னத்*
தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
படு மும்மதப் புனல் சோர*
வாரணம் பைய நின்று ஊர்வது போல்*
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப*
உடை மணி பறை கறங்க*
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி*
தளர்நடை நடவானோ! (2)
- தொடர் சங்கிலிகை - இரும்புச் சங்கிலியின் வளையங்களின் உரசலால்
- சலார் பிலார் என்ன - சலார் பிலார் என சப்தத்துடனும்
- தூங்கு - தொங்கும் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும்
- பொன் மணி ஒலிப்ப - பொன் மணிகள் அசைவதினால் ஏற்படும் ஓலியுடனும்
- படு மும்மத - கசியும்
- புனல் - மூன்று விதமான மத நீர்
- சோர - பெருகிட
- வாரணம் - யானையானது
- பைய நின்று - மெள்ள நின்று நிதானமாக
- ஊர்வது போல் - நடந்து போவது போலே
- கிண்கிணி - கால் சதங்கைகள்
- உடன் கூடி - ஒன்றோடொன்று சேர்ந்து
- ஆரவாரிப்ப - சப்திக்கவும்
- உடைமணி - அரை நாணில் கட்டிய சிறு மணிகள்
- பறை கறங்க - பறை போல் ஒலிக்கவும்
- சார்ங்கம் - சார்ங்கமென்னும் வில்லை
- பாணி - கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
- தடந் தாளிணை - தன் இரு பாதங்களாலும்
- கொண்டு - ஒன்றுகொன்று ஒத்திருக்க கூடிய
- தளர் நடை - அழகிய இளம் நடையை
- நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்
மதநீர் பெருக, இரும்புச் சங்கிலிகளின் உரசலால் உண்டாகும் சப்தத்துடனும், தொங்கும் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் பொன் மணிகள் அசைவதினால் ஏற்படும் ஓலியுடனும், யானை எப்படி மெல்ல நடந்து செல்லுமோ, அது போல் திருக்கால்களில் அணிந்திருக்கும் சதங்கைகளின் நாதத்துடனும், இடுப்பில் கட்டியிருக்கும் மணிகள் எழுப்பும் சப்தத்துடனும் சார்ங்கம் என்னும் வில்லேந்தியவனான எம்பெருமான், தன்னுடைய மிக உயர்ந்த பாதக் கமலங்களைக்கொண்டு, தளர் நடையாக நடந்து வர காத்திருக்கிறார் ஆழ்வார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment