About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 8 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 107

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 77

விஸ்²வ மூர்த்திர் மஹா மூர்த்திர் 
தீ³ப்த மூர்த்தி ரமூர்த்தி மாந்:|
அநேக மூர்த்தி ரவ்யக்தஸ்² 
ஸ²த மூர்த்திஸ்² ஸ²தா நந:||

  • 722. விஸ்²வ மூர்த்திர் - உலகத்தைச் சரீரமாக உடையவர். தனது பக்தர்களின் மனதை உள்வாங்கும், கண்களைக் கவரும் அழகிய வடிவம் கொண்டவர். பிரபஞ்சத்தின் வடிவில் மாயா சக்தியைக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றிலும் மாயாவைத் தூண்டக்கூடிய ஒரு வடிவம் கொண்டவர். 
  • 723. மஹா மூர்த்திர் - பெரிய உருவம் படைத்தவர். மகத்தான வடிவம் கொண்டவர்.
  • 724. தீ³ப்த மூர்த்திர் - ஒளி மயமான உருவம் படைத்தவர். பிரகாச வடிவம் கொண்டவர்.
  • 725. அமூர்த்தி மாந்நு - நுட்பமான உருவம் உடையவர். நெகிழ்வானவர். நிலையான வடிவம் இல்லாததால், விவரிக்க முடியாதவர். விரும்பும் வடிவங்களை தனது அவதாரங்களாக எடுத்துக் கொள்கிறார். உருவமற்றவர். வடிவங்கள் கர்மாவின் விளைவல்ல.
  • 726. அநேக மூர்த்திர் - பல உருவங்களை உடையவர்.
  • 727. அவ்யக்தஸ்²  - காண முடியாதவர். எளிதில் உணர முடியாதவர்.
  • 728. ஸ²த மூர்த்திஸ்² - நூற்றுக் கணக்கான உருவத்தை உடையவர்.
  • 729. ஸ²தா நநஹ - அநேக முகங்களை உடையவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment