||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 106 - அன்னமாய் அவதரித்து
வேதங்களை மீட்டவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
துன்னிய பேரிருள்* சூழ்ந்து உலகை மூட*
மன்னிய நான்மறை* முற்றும் மறைந்திடப்*
பின் இவ் உலகினில்* பேரிருள் நீங்க*
அன்று அன்னமது ஆனானே! அச்சோ அச்சோ*
அருமறை தந்தானே! அச்சோ அச்சோ!
- மன்னிய - நித்ய ஸித்தமான, அழிவில்லாத
- நால் மறை - சதுர் வேதங்களும்
- முற்றும் - முழுமையாக
- மறைந்திட - மறைந்து விட அதனால்
- துன்னிய - நிரந்தரமான
- பேர் இருள் - பெரிய அஞ்ஞான இருள்
- சூழ்ந்து - பரவி
- உலகை - லோகங்களை
- மூட - மறைத்துக் கொள்ள
- பின் இவ் - பின்பு இந்த
- உலகினில் - லோகங்களில்
- பேர் இருள் - அந்த மிகுந்த அந்தகாரம்
- நீங்க - நீங்கும்படி
- அன்று - அக் காலத்தில்
- அன்னம் அது ஆனானே - அன்னமாய் அவதரித்தவனே!
- அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
- அரு மறை தந்தானே - அந்த ரூபத்தோடு அருமையான வேதங்களை மீட்டு உபகரித்தவனே!
- அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!
முன்பொரு சமயம் பிரம்மாவிடம் இருந்து வேதங்கள் அனைத்தையும் சோமுகன் என்னும் அசுரன் அபகரித்து பெருங்கடலினுள் மறைய, அதனால் உலகம் முழுதும் அஞ்ஞானமாகிய காரிருள் சூழ, பின்பு எம்பெருமான் ஹம்சமாய் அவதரித்து அஞ்ஞானத்தை நீக்கினானே! என்னை அணைத்துக் கொள்ள வர வேண்டும், வேதங்களை மீட்டுக் கொடுத்தவனே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment