About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 29 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 130

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 100

அநந்த ரூபோ நந்த ஸ்ரீர்
ஜித மந்யுர் ப⁴யா பஹ:|
சதுர ஸ்²ரோ க³பீ⁴ராத்மா
விதி³ஸோ² வ்யாதி³ஸோ² தி³ஸ²:||

  • 932. அநந்த ரூபோ - எண்ணிறந்த உருவங்களை உடையவர். எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவர்.
  • 933. அநந்த ஸ்ரீர் - அளவற்ற செல்வமுள்ளவர். எல்லையற்ற செல்வம், மகிமை, சக்தி முதலியவற்றை உடையவர்.
  • 934. ஜித மந்யுர் - கோபத்தை வென்றவர். கட்டுப்பாட்டைப் பெற்றவர். 
  • 935. பயா பஹஹ - அடியவர் பயத்தைப் போக்குபவர். பக்தர்களின் மனதில் உள்ள பயத்தை (சம்சாரம்) அழிப்பவர்.
  • 936. சதுர ஸ்²ரோ - அடியவர் வேண்டுதல்களை உடனே செய்து வைப்பதில் சமர்த்தன். அனைத்து அம்சங்களிலும் திறமையானவர். எல்லோரிடமும் நியாயமாக நடந்து கொள்பவர். நான்கு திசைகளிலும் வியாபித்திருப்பவர். நான்கு திசைகளிலும் உள்ள அனைத்தையும் போஷித்து உண்பவர். அறிவுள்ள மக்களால் வணங்கப்படுபவர்.  
  • 937. க³பீ⁴ராத்மா - ஆழம் காண முடியாதவர். அனைவருக்கும் மேலானவர். ஆழமான இயல்புடையவர். 
  • 938. விதி³ஸோ² - இவருடைய இயல்பும், வடிவங்களும், குணங்களும் எல்லாத் திசைகளிலும் பரவியிருக்கின்றன. எல்லா திசைகளிலிருந்தும் அடையக் கூடியவர்.  தன் பக்தர்களுக்கு எல்லா நன்மைகளையும் அளிப்பவர். அனைத்தையும் வியாபித்து எங்கும் இருப்பவன். அனைத்து சாஸ்திரங்களையும் விரிவாக வெளிப்படுத்தியவர்.
  • 939. வ்யாதி³ஸோ² - பதவிகளைத் தருபவர். கட்டளையிடுபவர். 
  • 940. தி³ஸ²ஹ - நியமிப்பவர். நேர்மையான பாதையைக் காட்டுபவர். அறிவுரை வழங்குபவர். அறிவை வழங்குபவர். பக்தர்களால் தேடப்படுபவர். வேதங்களின் மூலம், காரியங்களைச் செய்ய வேண்டிய வழிகளையும், செய்யக் கூடாதவற்றையும் அவர் வகுத்துள்ளார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment