||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 116 - கற்பக மரத்தைப் பூமிக்குக் கொண்டு வந்தவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கற்பகக் காவு* கருதிய காதலிக்கு*
இப்பொழுது ஈவன் என்று* இந்திரன் காவினில்*
நிற்பன செய்து* நிலாத் திகழ் முற்றத்துள்*
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான்*
உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்|
- இந்திரன் காவினில் - இந்த்ரனுடைய உத்யாந வநத்திலிருந்த
- கற்பகம் காவு - கற்பகச் சோலையை
- கருதிய - தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று விரும்பிய
- காதலிக்கு - தனக்கு ப்ரியையான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
- இப்பொழுது - இப்பொழுதே
- ஈவன் - கொண்டு வந்து தருவேன்
- என்று - என்று சொல்லி
- நிலா திகழ் - நிலவொளி சூழ்ந்த
- முற்றத்துள் - அவள் வீட்டு முற்றத்தில்
- நிற்பன செய்து - கற்பக விருக்ஷத்தை நிற்க வைத்து
- உய்த்தவன் - தழைக்கும்படி செய்த கண்ணன்
- என்னை - என்னுடைய
- புறம் - முதுகை
- புல்குவான் - கட்டிக் கொள்வான்
- உம்பர் கோன் - அன்று தன் பராக்ரமத்தை காட்டிய தேவர்கள் தலைவன்
- என் புறம் - என்னுடைய
- புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்
தன்னுடைய காதலி சத்யபாமாவின் விருப்பத்திற்கு இணங்க இந்திரனுடைய நந்தவனத்திலிருந்த கற்பகச் சோலையை, "இதோ இப்பொழுதே கொண்டு வந்து தருகிறேன் " என்று கூறி அவள் வீட்டு நிலா காயும் முற்றத்தில் இருத்தி மலரச் செய்தவன், கண்ணன், என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! விண்ணோர் தலைவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment