||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
வில் உடைக்கும் போட்டி|
த்ரிவக்ராவின் சந்தன களிம்பிற்காக நன்றிகளை கூறிவிட்டு, பலராமனும் கிருஷ்ணனும் நடக்க ஆரம்பித்தனர். பல பக்தர்கள் அவர்களை தரிசிக்க தெரு ஓரங்களில் கூடினர். கிருஷ்ணர் யாகம் நடக்கும் இடத்திற்கு செல்ல விரும்பினர். வழியில் பார்ப்பவர்களிடம் வழி கேட்டு சென்றார். கம்சன் தனுர்யாகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தான். இதற்காக பலிப்பீடத்தின் முன்பு ஒரு பெரிய வில்லினை வைத்திருந்தான். கிருஷ்ணன் யாகம் நடக்கும் இடத்தினை அடைந்தான், அங்கு வில் இருப்பதை கண்டான், அது இந்திரரின் வில்லாக இருக்கும் என்று எண்ணினான்.
கிருஷ்ணன் வில்லிடம் செல்லுகையில், கம்சனின் சேவகர்கள் பாதுகாப்பில் வில் இருந்தது. கிருஷ்ணன் வில்லை தொட முடியாதவாறு பார்த்துக் கொண்டனர். அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கையை மீறி வில்லிடம் சென்று இடக்கையால் வில்லை எடுத்தான் கிருஷ்ணன். கண் இமைக்கும் நேரத்திற்குள் வில்லினை உடைத்தான்.
யானை கால்களில் மிதி படும் கரும்பு போல, கிருஷ்ணன் கையில் இருந்த வில்லானது இரு துண்டுகளானது. கூடியிருந்த அனைத்து மக்களும் கைதட்ட ஆரம்பித்தனர். வில்லினை உடைக்கும் சத்தம் வானெங்கும் உலகெங்கும் ஒலித்தது. கம்சன் அவனது மாளிகையில் இந்த ஒளியை கேட்டதும் திடுகிட்டான். அங்கிருந்த சேவகர்கள் கிருஷ்ணனை கைது செய்ய நினைத்தனர். அதனால் கிருஷ்ணனும் பலராமனும் கோபமுற்றனர். இரு துண்டான வில்லை இருவரும் எடுத்து காவலாளிகளுடன் சண்டையிட ஆரம்பித்தனர். இந்த குழப்பத்தின் இடையில், கம்சன் இன்னும் சில வீரர்களை அனுப்பினான். ஆனால் கிருஷ்ணனும் பலராமனும் அனைவரையும் வீழ்த்தி கொன்றனர். அனைவரையும் வீழ்த்திவிட்டு இருவரும் ஊரை சுற்றிபார்க்க தொடங்கினர். மதுராவின் மக்கள் அனைவரும் இவர்களை தெய்வமாகவே பார்க்க ஆரம்பித்தனர். கம்சனை பற்றிய பயம்கூட இல்லாமல், தைரியமாக தெருவில் வளம் வந்தனர். மாலை பொழுது ஆனதும் நந்தரும் உடன் வந்த கோபியரும் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்றடைந்தனர், கை கால்களை கழுவிவிட்டு உறங்க சென்றனர்.
கம்சன் அனைத்தையும் கண்டு நடுங்கினான், இவ்வளவு வலிமையான இந்திர வில் எப்படி உடைந்தது, சேவகர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்று யோசித்து கொண்டு இருந்தான். கம்சன் மனதில் தேவகியின் எட்டாவது மகன் வந்துவிட்டான் என்றும், அவன் மரணம் உறுதி என்றும் தோன்றியது. அவனது கனவில் பல அமங்கலமான சகுனங்களை கண்டான், அவனுக்கு யாரோ விஷம் கொடுத்தது போல தோன்றியது, அவன் நிர்வாணமாக கழுத்தில் மாலை மட்டும் அணிந்து கொண்டு நடந்து செல்வது போலவும் கனவில் தோன்றியது. அவன் இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்தான்.
மறுநாள் காலை, கம்சன் மல்யுத்த போட்டியை தொடங்க கட்டளையிட்டான். மதுராவின் மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஒன்று கூடினர். அவன் மனதில் நடுக்கம் இருந்தாலும், எதையும் வெளியில் காட்டாமல், கம்பீரமாக அரியாசனத்தில் அமர்ந்தான், அந்த இடத்தில் அவனை சுற்றி மந்திரிகளும், சேவகர்களும் நின்றுகொண்டு இருந்தனர். கம்சனால் வரவேற்க பட்ட நந்தனும் கோபியரும், கம்சனுக்கு சில பரிசுகளை வழங்கினர். இவ்வாறு நிகழ்ச்சி ஆரம்பமானது.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment