||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 97 - மின்னலை தன்னிடத்தே கொண்ட மேகமானவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பொன்னியல் கிண்கிணி* சுட்டி புறங் கட்டித்*
தன் இயல் ஓசை* சலன் சலன் என்றிட*
மின் இயல் மேகம்* விரைந்து எதிர் வந்தாற் போல்*
என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ*
எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ! (2)
- பொன் இயல் - பொன்னால் செய்யப்பட்ட
- கிண்கிணி - அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும்
- புறம் - நெற்றிக்கு அழகூட்டும்
- சுட்டி - சுட்டியையும்
- கட்டி - அணிந்து
- தன் - சதங்கைக்கு
- இயல் - பொருந்திய
- இசை - இயற்கையான ஒலியானது
- சலன் சலன் என்றிட - ‘ஜல்’ ‘ஜல்’ என்ற ஒலியும்
- மின் இயல் - மின்னலைத் தன்னிடத்தே கொண்ட
- மேகம் - மேகமானது
- விரைந்து - வேகமாக ஓடி வந்து
- எதிர் - எதிரே
- வந்தாற் போல் - வந்தது போல்
- என் இடைக்கு - என் இடையிலிருக்க விரும்பி
- ஓட்டரா - ஓடி வந்து
- அச்சோ! அச்சோ! - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
- எம்பெருமான் வாரா - எம்பெருமானே! வந்து
- அச்சோ! அச்சோ! - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!
பொன்னால் செய்த சதங்கைகளை கால் மற்றும் இடுப்பில் அணிந்தவாரும் நெற்றிச் சுட்டியுடனும், இவைகள் எழுப்பும் இன்பகரமான ஜல் ஜல் என்கிற ஓசையுடன், மின்னலுடன் கூடிய மேகம் விரைந்து எதிரில் வருவது போல், என்னுடைய இடுப்பில் அமர விரும்பி, ஓடி வந்து என்னை அணைத்துக் கொள்ள வேண்டும், எங்கள் தலைவனே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment