||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
1. அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம்|
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
மதுராவில் அவதரித்த மாயவனே! உனது இதழ்கள் அழகானவை. முகம் வசீகரமானது. கண்கள் வனப்பானவை. உனது புன்முறுவல் அழகு. இதயம் அழகு, தளிர்நடை அழகு, மதுராதிபனே நீ நிறைந்திருப்பதால் அகிலமே அழகானது.
2. வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம்|
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
உனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.
3. வேணுர் மது⁴ரோ ரேணுர் மது⁴ர꞉
பாணிர் மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ|
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
உனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.
4. கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம்|
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
உனது பாடல் அழகு. உன் பட்டாடை அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப் பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு..
5. கரணம் மது⁴ரம் தரணம் மது⁴ரம்
ஹரணம் மது⁴ரம் ஸ்மரணம் மது⁴ரம்|
வமிதம் மது⁴ரம் ஷமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
உனது குறும்பு செயல்கள் அழகு. நீ எதையும் கடந்து நிற்பது அழகு. பக்தர்களின் மனதை அபகரிப்பது அழகு. உன்னைப்பற்றி நினைப்பதே இனிமையானது. அணி அழகு, தோற்றம் அழகு, மதுராபுரியரசே, யாவும் நீயாக இருப்பதால் இவ்வுலகமே அழகானது.
6. கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா|
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
கதம்ப பூக்கள் அழகு. மாலை அழகு. அலைகள் அழகு. யமுனை நீர் அழகு. தாமரை மலர் அழகு. மதுராபுரி நாயகனே, அகிலமே உனது என்பதால் அதுவும் பேரழகு.
7. கோ³பீ மது⁴ரா லீலா மது⁴ரா
யுக்தம் மது⁴ரம் முக்தம் மது⁴ரம்|
த்³ருஷ்டம் மது⁴ரம் ஶிஷ்டம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
தோழியர் அழகு, கொண்டாட்டம் அழகு, கூடல் அழகு, சிஷ்ட பரிபாலனம் அழகு, பார்வை அழகு, பாவனை அழகு, மதுராதிபனே சகலமும் நீயே என்பதால் அகிலமே அழகு.
8. கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர் மது⁴ரா ஸ்ருஷ்டிர் மது⁴ரா|
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
ஆயர் அழகு. பசுக்கள் அழகு, செண்டை அழகு, பிறவி அழகு, பிரிதல் அழகு, பயன் பலிப்பது அழகு, நீயே எதிலும் பரவி நிற்பதால் இந்த உலகமே அழகு.
||இதி ஸ்ரீ மதுராஷ்டகம் சம்பூர்ணம்||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
No comments:
Post a Comment