||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.33
அஸௌ கு³ணமயைர் பா⁴வைர்
பூ⁴த ஸூக்ஷ்மேந் த்³ரியாத் மபி⁴:|
ஸ்வநிர் மிதேஷு நிர்விஷ்டோ
பு⁴ங்க்தே பூ⁴தேஷு தத்³ கு³ணாந்||
- பூ⁴த ஸூக்ஷ்ம - பூத ஸூக்ஷ்மம்
- இந்த்³ரிய ஆத்ம அபி⁴ஹி - இந்திரியங்கள் மனஸ் இவையாகிற
- கு³ணமயைர் பா⁴வைர் - ஸத்வம் முதலிய குண விசேஷங்களால்
- ஸ்வநிர் மிதேஷு - தன்னால் உண்டாக்கப்பட்ட
- பூ⁴தேஷு - ஜீவர்கள் இடத்தில்
- நிர்விஷ்டோ - புகுந்தவராய்
- அஸௌ - இந்த வாஸுதேவன்
- தத்³ கு³ணாந்நு - அதற்குத் தகுந்த குண விசேஷங்களை
- பு⁴ங்க்தே - அனுபவிக்கிறார்
சப்தம் (ஒலி), ஸ்பரிசம் (ஊறு), ரூபம் (உடல்), ரசம் (சுவை), கந்தம் (நாற்றம் - வாசனை) என்கிற ஐந்து பூத சூட்சமங்கள்; மெய், வாய், கண், மூக்கு, செவி முதலிய புலன்கள்; மனம்; முக்குணங்கள் - இவைகளைக் கொண்டு, தன்னால் படைக்கப்பட்ட சகல ஜீவராசிகளிடமும் தானே உள்ளும் புறமும் கரந்து நின்று, பகவான் அந்தந்த குணங்களை அனுபவிக்கின்றனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment