||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அர்ஜுனனின் மனக்குழப்பம்|
அதற்கு அந்த அந்தணர், "இது துவாரகை. இங்கே கிருஷ்ணர், பலராமர், பிரத்தியும்னன் போன்ற வீரர்கள் உள்ளனர். அவர்களே எனக்கு உதவ முடியாதபோது, நீ இளைஞன், உன்னால் எப்படி முடியும்?" என்று கேட்டார்.
இதை கேட்ட அர்ஜுனன், "அந்தணரே! நீர் சொல்வது உண்மைதான். பாலராமருக்கும் கிருஷ்ணருக்கும் நான் இணையானவன் அல்ல. ஆனால் நான் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன். புகழ் பெற்ற காண்டீவம் என்னும் வில் என்னுடையது. நான் என்னுடைய பராக்கிரமத்தினால் பரமசிவனையே மகிழ்வித்திருக்கிறேன். ஆகவே உம்முடைய அடுத்த குழந்தையை என்னால் காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறேன்" என்று சொன்னான்.
அர்ஜுனன் வார்த்தைகளைக் கேட்டு, அந்தணர் சற்றுத் தேறினார், வீடு திரும்பினார். பிறகு அடுத்த பிரசவ சமயம் வந்ததும், அர்ஜுனனிடம் ஓடி வந்து குழந்தையைக் காப்பாற்றும்படி வேண்டினார்.
அர்ஜுனன் சிவனைப் பூஜை செய்து விட்டு, காண்டீபத்தை கையில் எடுத்துக் கொண்டு, அந்தணர் வீடு சென்றான். பிரசவ அறையைச் சுற்றிலும் பாணங்களால் ஒரு கூடு கட்டினான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு குழந்தை பிறந்தது. அது சிறிது அழுதது. பிறகு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது பளிச்சென்று ஆகாயத்துக்குப் பறந்து சென்று மறைந்துவிட்டது. இதனால் அந்தணருக்கு ஏற்பட்ட கோபம் கொஞ்சநஞ்சம் அல்ல. அவர் அர்ஜுனனை கண்டபடி வைதார். "கோழையாகிய உன் வார்த்தைகளை நான் நம்பினது தவறு. பாலராமராலும், கிருஷ்ணராலும் செய்ய முடியாத காரியத்தை இந்த அர்ஜுனனால் எப்படிச் செய்ய முடியும்? நீயும் உன் காண்டீவமும்!" என்றார்.
ஆனால் அர்ஜுனன் தளர்ந்து விடவில்லை. தன யோகபலத்தைக் கொண்டு யமனின் இருப்பிடமான சம்யமநீ நகரத்திற்குச் சென்றான். ஆனால், குழந்தை அங்கே இல்லை. பிறகு துவாரகை சென்று எல்லா இடங்களிலும் தேடினான். குழந்தை கிடைக்கவேயில்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment