||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
025. திருத்தலைச்சங்க நாண்மதியம்
தலைச்சங்காடு - திருவாரூர்
இருபத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 2 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 2 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் – 1736 - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் – 2782 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
செப்புங்கால் ஆதவனும் திங்களும் வானும் தரையும்*
அப்பும் காலும் கனலும் ஆய் நின்றான் கைப்பால்*
அலைச் சங்கம் ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்*
தலைச் சங்க நாண் மதியத்தான்*
- கைப்பால் - கையினிடத்தில்
- அலை சங்கம் - அலைகளை உடைய கடலினிடத்துத் தோன்றிய பாஞ்சஜந்யம் என்னும் சங்கத்தை
- ஏந்தும் - தரித்துள்ள
- அணி அரங்கத்து அம்மான் - திருவரங்கத்தில் எழுந்தருளி உள்ள ஸ்வாமியும்
- தலைச்சங்கநாண்மதியத்தான் - திருத்தலைச்சங்க நாண்மதியம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ளவனுமான எம்பெருமான்
- செப்பம் கால் - சொல்லுமிடத்தில்
- ஆதவனும் - சூரியனும்
- திங்களும் - சந்திரனும்
- வானும் - ஆகாயமும்
- தரையும் - பூமியும்
- அப்பும் - ஜலமும்
- காலும் - காற்றும்
- கனலும் - அக்னியும்
- ஆய் - ஆகி
- நின்றான் - எங்கும் பரவி நிற்பவனாவன்
--------------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 2
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1736 - கண்ணபுரத்தானை எப்பொழுது நேரில் காண்பேன்?
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கண் ஆர் கண்ணபுரம்* கடிகை கடி கமழும்*
தண் ஆர் தாமரை சூழ்* தலைச்சங்கம் மேல் திசையுள்*
விண்ணோர் நாண்மதியை* விரிகின்ற வெம் சுடரை*
கண் ஆரக் கண்டு கொண்டு* களிக்கின்றது இங்கு என்று கொலோ?
002. திவ்ய ப்ரபந்தம் - 2782 - செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச்
மன்னும் மறை நான்கும் ஆனானை*
புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை*
நாங்கூரில் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*
நல் நீர்த் தலைச்சங்க நாள் மதியை*
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை*
தென் நறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment