||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.10
பஞ்சம: கபிலோ நாம
ஸித்³தே⁴ஸ²: கால விப்லுதம்|
ப்ரோவாசா ஸுரயே ஸாங்க்²யம்
தத்த்வ க்³ராம விநிர்ணயம்||
- பஞ்சமஹ் - ஐந்தாவதாக
- ஸித்³தே⁴ஸ²ஹ் - ஸித்தர்களுக்கெல்லாம் ஈசனான
- கபிலோ நாம - கபிலர் என்று பிரஸித்தவராய்
- கால விப்லுதம் - காலக்கிரமத்தில் நஷ்டமடைந்த
- தத்த்வ க்³ராம விநிர்ணயம் - தத்வங்களின் சமூகத்தை நிர்ணயித்து தருவதான
- ஸாங்க்²யம் - ஸாங்க்யம் என்ற சாஸ்திரத்தை
- ஆஸுரயே ப்ரோவாச - ஆஸூரி என்ற பிராமணனுக்கு சொன்னார்
ஐந்தாவதாக, சித்தர்களின் தலைவரான கபில வாசுதேவனாகத் திருவவதாரம் செய்து, வெகுகாலமாகி விட்டதால் நலிவடைந்திருந்த தத்துவங்களை நன்கு விளங்குவதான 'ஸாங்க்யம்' என்ற யோகத்தை 'ஆசுரி' என்ற அந்தணனுக்கு உபதேசம் செய்தருளினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment