||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 56 - வித்தகன் வேங்கட வாணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
சுற்றும் ஒளி வட்டம்*
சூழ்ந்து சோதி பரந்தெங்கும்*
எத்தனை செய்யிலும்*
என் மகன் முகம் நேரொவ்வாய்*
வித்தகன் வேங்கட வாணன்*
உன்னை விளிக்கின்ற*
கைத்தலம் நோவாமே*
அம்புலீ! கடிதோடி வா!
- சுற்றும் - நாற்புறமும்
- ஒளி - ஒளி பொருந்திய
- வட்டம் - மண்டலமானது எப்போதும்
- சூழ்ந்து - சுழன்று
- எங்கும் - எல்லாத் திசைகளிலும்
- சோதி பரந்து - ஒளி நிரம்பி இருக்குமாறு
- எத்தனை செய்யிலும் - உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
- என் மகன் - என் மகனான கண்ணபிரானுடைய
- முகம் - திருமுக மண்டலத்துக்கு
- நேர் ஒவ்வாய் - பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்
- வித்தகன் - ஆச்சர்யப்படத் தக்கவனாய்
- வேங்கடம் - திருவேங்கட மலையிலே
- வாணன் - நின்று கொண்டிருக்கும் இக்கண்ணபிரான்
- உன்னை விளிக்கின்ற - உன்னை அழைக்கின்றான்
- கை தலம் - அவன் திருக்கைகள்
- நோவாமே - நோகாதபடி
- அம்புலி - சந்திரனே!
- கடிது ஓடி வா - சீக்கிரமா ஓடி வா
சந்திரனே! உன் வட்டமான அழகிய முகத்திலிருந்து சிதறுகின்ற குளிர்ந்த வெண்கதிர்களின் ஒளியானது, இவ்வுலகம் முழுதும் விரவி ஒளி வீசுபவனாய் எத்தனை அழகாக நீ இருக்க முயன்றாலும் அவை எல்லாம் என் மகனின் அழகிய திருமுகத்திற்கு முன் எக்காலத்திலும் ஈடாக முடியாது. வித்தகர்க்கு எல்லாம் வித்தகன், தூய ஞானத்தின் வடிவானவன்; மலைகளிலே புனிதமான ஆச்சர்யமான வேங்கடமலையில் நிற்கின்ற திருக்கோலத்துடன் வாழ்கின்ற வேங்கடவன் உன்னை எத்துனை காலமாய் அழைக்கின்றான். அச்சிறு பாலகனின் பச்சிளங்கைகளில் வலி தோன்றும் முன்னே விரைந்தோடி வந்து அவனுடன் விளையாடுவாயாக', என்று யசோதை அன்னை நிலவிடம் கூறுகிறாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment