||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
030. திரு வண்புருஷோத்தமம் (திருநாங்கூர்)
முப்பதாவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ புருஷோத்தம நாயகி தாயார் ஸமேத ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: புருஷோத்தமன்
- தாயார் மூலவர்: புருஷோத்தம நாயகி
- திருமுகமண்டலம் திசை: கிழக்கு
- திருக்கோலம்: நின்ற
- புஷ்கரிணி/தீர்த்தம்: திருப்பாற்கடல்
- விமானம்: சஞ்சீவி விக்ரஹ
- ஸ்தல விருக்ஷம்: பலா, வாழை
- ப்ரத்யக்ஷம்: உபமன்யு
- ஸம்ப்ரதாயம்: தென் கலை
- மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
- பாசுரங்கள்: 10
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
மணவாள மாமுனிகள் இங்கு தங்கி வண்புருஷோத்தம பெருமாளுக்கு இரண்டு வருடம் சேவை புரிந்துள்ளார். இங்கு மூன்று ஆஞ்சநேயர் சந்நதிகள் உள்ளன. அதில் ராமர் சந்நதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய் பொத்திய நிலையில் உள்ளார். பாசி படியாத திருப்பாற்கடல் இத்தலத்திலிருந்து வடக்கே அமைந்துள்ளது. செண்பகப் பூ என்றால் இந்த பெருமாளுக்கு மிகவும் விருப்பம். இங்கு பெருமாளை அயோத்தி ராமனாகக் கருதி வழிபடுகின்றனர். சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகாவிஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வண்புருஷோத்தமர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக் கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள். தாயார் புருஷோத்தம நாயகி தென் மேற்கு மூலையில் தனி சந்நதியில் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். உள் பிரகாரத்தில் ஆண்டாள், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் சந்நதிகள் உள்ளன. பங்குனி மாதம் 10ம் நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப் படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் மங்களாஸாஸநம் செய்த ஸ்தலம். இத்தல பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார் என்பது ஐதீகம். திருச்சி அருகே திருக்கரமனூர். அதே போல் இந்த திருநாங்கூர் வண்புருஷோத்தமன். வேறு எங்கும் புருஷோத்தமனுக்கு தனி சந்நதி இல்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment