||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 107 - நாரணனைப் பாடுவர் வைகுண்டம் செல்லலாம்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்
தரவு கொச்சகக் கலிப்பா
நச்சுவார் முன் நிற்கும்* நாராயணன் தன்னை*
அச்சோ வருக என்று* ஆய்ச்சி உரைத்தன*
மச்சு அணி மாடப்* புதுவைக்கோன் பட்டன் சொல்*
நிச்சலும் பாடுவார்* நீள் விசும்பு ஆள்வரே! (2)
- நச்சுவார் - தன்னை விரும்பிப் பக்தி செய்பவர்கள்
- முன் நிற்கும் - முன்னே வந்து நிற்குந் தன்மையுள்ள
- நாராயணன் தன்னை - நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
- ஆய்ச்சி - இடைக் குலத்தவளான யசோதை அணைத்துக் கொள்ளுகையில் உண்டான விருப்பம் தோன்றும்படி
- அச்சோ வருக - அச்சோ வருவாயாக
- என்று உரைத்தன - என்று சொன்னவற்றை
- மச்சு அணி - பல நிலைகளால் அழகிய
- மாடம் - மாளிகைகளை உடைய
- புதுவை - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
- கோன் - ஸ்வாமியான
- பட்டன் - பெரியாழ்வார்
- சொல் - அருளிய இப் பத்துப் பாசுரங்களையும்
- பாடுவார் - ஓதுபவர்கள்
- நிச்சலும் - அனுதினமும்
- நீள் விசும்பு - பரமாகாசமாகிற பரம பதத்திற்கு
- ஆள்வர் – நிர்வாஹகராவர்
தன்னை துதிப்பவர் முன் வந்து நிற்கும் தன்மையுள்ள நாராயணனாகிய கண்ணனை இடையர் குல யசோதை அணைத்துக்கொள்ள விரும்பி அழைத்ததை, மாளிகைகளால் சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவனான பெரியாழ்வார் இப்பத்து பாசுரங்களால் விவரித்துரைத்தார். எப்போதும் இப்பாசுரங்களைப் பாடுபவர்கள் வான் புகழ் அடைவர்.
அடிவரவு: பொன் செங்கமலம் பஞ்சவர் நாறிய சுழல் போர் மிக்க என்னிது கண்ட துன்னிய நச்சுவர் - வட்டு
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment