||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சத்ராஜித் கொல்லப்படுதல்|
தம் அத்தை குந்தியைப் பற்றியும், அவளுடைய பிள்ளைகளைப் பற்றியும் கிருஷ்ணர் எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருந்தார். அவர்கள் தங்கியிருந்த வாரணாவத அரண்மனையில் பஞ்ச பாண்டவர்களும், அவர்களுடைய தாயாரும் தீயில் அகப்பட்டு இறந்து விட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது. அவர்களுடைய கருகிய உடல்களும் கிடைத்ததாகத் தகவல் கிடைத்தது. எல்லாம் துரியோதனனின் செயல் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். பீஷ்மர், திருதராஷ்டிரர், விதுரர் இன்னும் மற்றவர்களுக்குத் தங்கள் துக்கத்தைத் தெரிவிப்பதற்காகக் கிருஷ்ணரும் பலராமரும் அஸ்தினாபுரம் சென்றார்கள். ஆனால் பாண்டவர்கள் சாகவில்லை என்பது கிருஷ்ணருக்குத் தெரியும்.
அவர்கள் ஊரை விட்டுச் சென்ற சமயத்தில் துவாரகையில் ஒரு விபரிதச் சம்பவம் நடந்தது. சத்யபாமாவின் திருமணத்திற்கு முன்பு எத்தனையோ இளைஞர்கள் அவள் மீது கண்ணாக இருந்தார்கள். அவளை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். கிருதவர்மன் அவர்களில் ஒருவன்.
அவன் ஒரு தடவை சத்ராஜித்தயே, அவர் பெண்ணைத் தனக்குக் கொடுக்கும் படி கேட்க, அவர் ஒரு பதிலும் சொல்லவில்லை. ஆகையால் சத்யபாமா தனக்குக் கிடைப்பாள் என்ற ஆசையில் அவன் இருந்தான். ஆனால் சத்யபாமா கிருஷ்ணருக்குக் கொடுக்கப்பட்டு விட்டாள் என்று தெரிந்ததும் அவன் மிகவும் கோபம் கொண்டான்.
சத்யபாமா மீது கண்ணாக இருந்த இன்னொருவன் சததன்வா. ஒரு சமயம் கிருஷ்ண பக்தராக இருந்த அக்ரூரர் ஸ்யமந்தக மணி காரணமாகச் சத்ராஜித்தின் மீது பொறமை கொண்டிருந்தார். பொருளாசை காரணமாக நல்ல மனிதனும் கெட்டவனாகினார். அந்த மணி தம்மிடம் இருக்க வேண்டும் என்ற ஆசை இந்த நல்ல மனிதரின் மூளையையும் குழப்பியது. அத்துடன் அவரும் ஒரு சமயம் சத்ய பாமாவைத் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார்.
கிருஷ்ணரும் பலராமரும் ஊரில் இல்லை என்றது தெரிந்ததும், கிருதவர்மனும் அக்ரூரரும் சததன்வாவிடம் சென்று, "இதோ பார், சத்ராஜித் நம் எல்லோரையும் ஏமாற்றி விட்டார், அவரை நாம் பழிக்கு பழி வாங்கினால் என்ன?" என்று சொன்னார்கள். அந்த மணியைத் தான் அடைய வேண்டும் என்ற ஆசையை ஏற்கனவே கொண்டிருந்த சததன்வா, அவர்களால் தூண்டப்பட்டதும், சத்ராஜித் மத்திய உணவு முடித்து விட்டு, படுத்து இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது, கொஞ்சம் மயக்க மருந்தினை கொடுத்து, அவரை காட்டிற்குள் கொண்டு சென்றார்கள். அவருடைய கைகளில் ஸ்யமந்தக மணியும் இருந்தது. அங்கயே வைத்து அவரைக் கொன்றார்கள், மணியை எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment