||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
இந்த்³ர உவாச
1. நமஸ்தேஸ்து மஹாமாயே
ஸிபீடே² ஸுரபூஜிதே|
சங்க² சக்ர க³தா³ஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||
வணக்கத்திற்கு உரியவளே! சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயையே! ஸ்ரீசக்கர பீடத்தில் நிலைத்து வசிப்பவளே! தேவர்களால் வழிபடப்படுபவளே! சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருக்கும் மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் தாயே!
2. நமஸ்தே க³ருடா³ ரூடே⁴
கோலாஸுர ப⁴யங்கரி|
சர்வ பாப ஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||
எல்லோரும் வணங்கும்படியாக கருட வாகனத்தில் ஆரோகணித்து வருபவளே! கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவளே! எல்லா பாவங்களையும் அழிக்கும் தேவியே! மஹாலக்ஷ்மி தாயே! உன்னை வணங்குகின்றேன் அம்மா!
3. ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே³
ஸர்வ து³ஷ்ட ப⁴யங்கரி|
ஸர்வ து³꞉க² ஹரே தே³வி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||
உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவளே! அனைத்து வரங்களையும் அளிப்பவளே! எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளே! எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் அன்னையே!
4. ஸித்³தி⁴ பு³த்³தி⁴ ப்ரதே³ தே³வி
பு⁴க்தி முக்தி ப்ரதா³யினி|
மந்த்ர மூர்தே ஸதா³ தே³வி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||
அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தக்கூடிய தெய்வீக வெற்றியினை அருள்பவளே! மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளே! மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் அம்மையே!
5. ஆத்³யந்த ரஹிதே தே³வி
ஆதி³ஸக்தி மஹேஸ்வரி|
யோக³ஜ்ஞே யோக³ ஸம்பூ⁴தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||
முதலும் முடிவும் அற்ற தேவியே! பிரபஞ்சத்தின் முதல் சக்தியான ஆதிபராசக்தியே! யோக நிலையில் தோன்றியவளே! யோக வடிவாகத் திகழ்பவளே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் மாதாவே!
6. ஸ்தூ²ல ஸூக்ஷ்ம மஹாரௌத்³ரே
மஹாஸக்தி மஹோத³ரே|
மஹா பாபஹரே தே³வி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||
பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவளே! எளிதில் உணரப்பட முடியாதவளே! (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் கொள்பவளே! அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளே! பெரும் பாவங்களை அழிப்பவளே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் அம்மா!
7. பத்³மாஸன ஸ்தி²தே தே³வி
பரப்³ரஹ்ம ஸ்வரூபிணி|
பரமேஸி ஜக³ன்மாத꞉
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||
பத்மாசனத்தில் அமர்ந்தவளே! பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவளே! பரமேஸ்வரி என விளங்குபவளே! அகில உயிர்களுக்கும் அன்னையே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் தாயே!
8. ஸ்வேதாம் ப³ரத⁴ரே தே³வி
நானாலங்கார பூ⁴ஷிதே|
ஜக³த்ஸ்தி²தே ஜக³ன்மாத꞉
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||
தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவளே! பலவிதமான அலங்காரங்கள் கொண்டு திகழ்பவளே! பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளே! அகில உலகங்களுக்கும் அன்னையே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் அன்னையே!
பலஸ்ருதி:
9. மஹாலக்ஷ்ம் யஷ்டகம் ஸ்தோத்ரம்
ய꞉ படே²த்³ப⁴க்தி மான்னர꞉|
ஸர்வஸித்³தி⁴ மவாப் னோதி
ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா³:||
மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.
10. ஏக காலே படே²ந் நித்யம்
மஹாபாப வினாஸனம்|
த்³வி காலம் ய꞉ படே²ன்னித்யம்
த⁴னதா⁴ன்ய ஸமன் வித꞉||
தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும்.
11. த்ரிகாலம் ய꞉ படே²ந் நித்யம்
மஹாஸத்ரு வினாஸனம்|
மஹாலக்ஷ்மீர் ப⁴வேன்னித்யம்
ப்ரஸன்னா வரதா³ ஸுபா⁴||
தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.
||இதி ஸ்ரீ மஹா லக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூரணம்||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
No comments:
Post a Comment