About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 9 April 2022

ஸ்ரீ இராம புஜங்க அஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. பஜே விசேஷ சுந்தரம்: ஸமஸ்தபாப கண்டனம் |
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்||

அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

2. ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்:
ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹ ராம மத்வயம்||

அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிப்போம்.

3. நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்:
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராம மத்வயம்||

ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையில் இருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குவோம்.

4. ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்:
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராம மத்வயம்||

உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுது முள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிப்போம்.

5. நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்:
சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராம மத்வயம்||

பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிப்போம்..

6. பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்:
குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்||

சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுவோம்.

7. மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை:
பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராம மத்வயம்||

மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்பவராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிப்போம்.

8. சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்:
விராஜமான தேசிகம் பஜேஹ ராம மத்வயம்||

நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிப்போம்..

9. ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம்:
வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய|
வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்திம்:
ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம்||

வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம் !!

||இதி ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment