About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 18 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 125

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 95

அநந்தோ ஹுத பு⁴க்³ போ⁴க்தா 
ஸுக²தோ³ நைகஜோ க்³ரஜ:
அநிர் விண்ண: ஸதா³ மர்ஷீ 
லோகா தி⁴ஷ்டா நமத்³ பு⁴த:||

  • 889. அநந்தோ ஹுத பு⁴க்³ போ⁴க்தா - மிகவும் மகிமையுள்ள இந்திரனையும், பிரமனையும் உடையவர். எல்லையற்றவர். எங்கும் நிறைந்தவர். நிலைத்திருப்பவர். காலம் மற்றும் இடத்தின் வரம்புகளைத் தாண்டிச் செல்லும் திறன் நிறைந்தவர். பூமியை அதன் தலையில் சுமந்து செல்லும் பாம்பாகிய ஆதிசேஷனாக (அனந்தன்) வெளிப்படுபவர். யக்ஞத்தைப் பாதுகாக்கிறார். 
  • 890. ஸுக²தோ³ - சுகத்தை அளிப்பவர். பக்தர்களுக்கு பேரின்பத்தை அளிப்பவர். பக்தர்களை மோட்சத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறார். 
  • 891. நைகத - ஒன்று மட்டும் கொடாதவர். பலவும் தருபவர். மீண்டும் மீண்டும் அவதாரம் எடுப்பவர். மீண்டும் மீண்டும் வரங்களை வழங்குபவர். 
  • 892. அக்³ரஜஹ - அடியார்க்கு முன்பாக விளங்குபவர். முதன்முதலில் பிறந்தவர். 
  • 893. அநிர் விண்ணஸ் - துயர் அற்றவர். அவநம்பிக்கை இல்லாதவர். பதட்டம் இல்லாதவர். மனச்சோர்வு அற்றவர்.
  • 894. ஸதா³ மர்ஷீ - பொறுமையுள்ளவர். மன்னிப்பவர். அனைத்து கைங்கர்யங்களையும் பொறுமையுடன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார்.
  • 895. லோகா தி⁴ஷ்டாநம் - உலகங்களைத் தாங்குபவனாய் இருப்பவர்.
  • 896. அத்பு⁴தஹ - அற்புதமாய் உள்ளவர். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார். செயல்கள், படைப்புகள் அனைத்தும் அற்புதமானவை

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment