||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 96
ஸநாத் ஸநாதந தம:
கபில: கபிரவ் யய:|
ஸ்வஸ்தி த³: ஸ்வஸ்தி க்ருத் ஸ்வஸ்தி
ஸ்வஸ்தி பு⁴க் ஸ்வஸ்தி த³க்ஷிண:||
- 897. ஸநாத் - அநுபவிக்கப்படுபவர். பழமையானவர்.
- 898. ஸநாதந தமஹ் - மிகப் பழமையானவர்.
- 899. கபிலஹ் - விளக்கம் உற்றவர். அழகான நிறமுடையவர்.
- 900. கபிரவ்யயஹ - அழிவில்லா ஆனந்தத்தை அனுபவிப்பவர். எப்போதும் குறையாத பேரின்பத்தை அனுபவிப்பவர்.
(ஒன்பதாம் நூறு திரு நாமங்கள் நிறைவு)
- 901. ஸ்வஸ்தி த³ஸ் - மகத்தான மங்களத்தைக் கொடுப்பவர். மங்களத்தை அளிப்பவர்.
- 902. ஸ்வஸ்தி க்ருத் - மகத்தான மங்களத்தைச் செய்பவர். பக்தர்களுக்கு நன்மை செய்பவர்.
- 903. ஸ்வஸ்தி - தானே மங்கள வடிவமாயிருப்பவர்.
- 904. ஸ்வஸ்தி பு⁴க் - மங்களத்தைப் பரிபாலிப்பவர். பேரின்பத்தை அனுபவிப்பவர். பக்தர்களை, அவரது மகிமையை அனுபவிக்க உதவுபவர்.
- 905. ஸ்வஸ்தி த³க்ஷிணஹ - இந்த மங்களத்தை யாக தக்ஷிணையாகத் தருபவர். தனது பக்தர்களுக்கு மங்களகரமான விஷயங்களை தக்ஷிணையாக வழங்குபவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment