||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
031. திருச்செம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)
முப்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1268 - 1277 - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
ஊர்வேன் மடலை ஒழிவேன் மடம் நாணம்*
சேர்வேன் கரிய திருமாலை பார் அறிய*
அம்பொன் செய் கோயில் அரங்கன் அணி நாங்கூர்ச்*
செம்பொன் செய் கோயிலினில் சென்று*
- பார் அறிய – உலகத்தவர் எல்லாம் உணரும் படி வெளிப்படையாக
- மடம் நாணம் ஒழிவேன் – மடப்பத்தையும் நாணத்தையும் துறந்தவளாகி
- மடலை ஊர்வேன் – மட லூர்ந்து செல்வேன். அதனாலேனும்
- அம்பொன் செய் கோயில் அரங்கன் – அழகிய பொன்னினால் செய்யப்பட்ட கோயிலை உடைய திருவரங்க நாதனது
- அணி – அழகிய
- நாங்கூர் – திருநாங்கூரைச் சேர்ந்த
- செம்பொன்செய்கோயிலினில் – திருச்செம்பொன் செய் கோயில் என்னும் ஸ்தலத்தில்
- சென்று – போய்
- கரிய திருமாலை – அங்கு எழுந்தருளியுள்ள கரு நிறம் உடைய எம்பெருமானை
- சேர்வேன் – அடைவேன் யான்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment