||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
2. பெரியாழ்வார் திருமொழி - 13 - 473
461 பாசுரங்கள் – பெரியாழ்வார்
105 x 105 x 105 x 105 x 41 = 461 பாசுரங்கள்
பெரியாழ்வார் திருமொழி முதலாம் பத்து - 105 பாசுரங்கள்
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 13 - 22
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - 21 பாசுரங்கள் - 23 - 43
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 44 - 53
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - 10 பாசுரங்கள் - 54 - 63
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 64 - 74
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 75 - 85
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 86 - 96
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 97 - 107
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 108 - 117
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - 105 பாசுரங்கள்
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 118 - 127
இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 128 - 138
இரண்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - 13 பாசுரங்கள் - 139 - 151
இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - 10 பாசுரங்கள் - 152 - 161
இரண்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 162 - 171
இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 172 - 181
இரண்டாம் பத்து - ஏழாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 182 - 191
இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 192 - 201
இரண்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 202 - 212
இரண்டாம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 213 - 222
பெரியாழ்வார் திருமொழி - மூன்றாம் பத்து - 105 பாசுரங்கள்
மூன்றாம் பத்து - முதலாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 223 - 233
மூன்றாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 234 - 243
மூன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 244 -253
மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - 10 பாசுரங்கள் - 254 - 263
மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 264 - 274
மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 275 - 285
மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 286 - 296
மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 297 - 306
மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 307 -317
மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 318 - 327
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து - 105 பாசுரங்கள்
நான்காம் பத்து - முதலாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 328 - 337
நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 338 -348
நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 349 - 359
நான்காம் பத்து - நான்காம் திருமொழி - 11 பாசுரங்கள் - 360 - 370
நான்காம் பத்து - ஐந்தாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 371 - 380
நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 381 - 390
நான்காம் பத்து - ஏழாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 391 - 401
நான்காம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 402 - 411
நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 11 பாசுரங்கள் - 412 - 422
நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 423 - 432
பெரியாழ்வார் திருமொழி - ஐந்தாம் பத்து - 41 பாசுரங்கள்
ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 433 - 442
ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 443 - 452
ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள் - 453 - 462
ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி - 11 பாசுரங்கள் - 463 - 473
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு குழந்தையாக அவதரித்தது முதலாக பல பல அபாயங்கள் நேர்ந்ததாலோ என்னவோ, பெரியாழ்வார், ஸ்ரீ கிருஷ்ணா அவதாரத்தை மிகவும் ஈடுபட்டு அனுபவிக்கிறார். அவர் தாய் அன்பு மிகுந்தவராய், தன்னை யசோதையாக பாவித்து தன் குழந்தையின் ஒவ்வொரு பருவ விளையாட்டுக்களிலும் கருத்தைச் செலுத்தி பாடுகிறார். ஸ்ரீ கிருஷ்ணனின் திரு அவதாரத்தை ஊரே ஒன்று கூடி உற்சவமாக கொண்டாடுவதும், அத்தெய்வக் குழந்தையின் திருமேனி அழகை பாதாதி கேசத்தை வர்ணித்தும், தாலாட்டுதல், சந்திரனைக் காட்டி அழைத்தல், செங்கீரை ஆடுதல், சப்பாணி கொட்டுதல், தளர்நடை நடத்தல் என்று அனைத்து மழலைப் பருவ அனுபவங்களையும் பாசுரமாக பாடுகிறார். குழந்தையின் அமானுஷ்யமான (அதாவது மனிதக் குழந்தையால் செய்ய முடியாத செயல்களை) கண்டு, "எப்பேர்பட்ட குழந்தையை காட்டில் மாடு மேய்க்க அனுப்பினேனே" என்று வருந்துவதாக அனுபவித்து பாசுரமிடுகிறார்.
பகவானின் விபவாவதாரங்களை (பூவுலகில் அவதரித்து வாழ்ந்து காட்டிய அவதாரங்கள்) அனுபவிக்கப் பெறாத நம் போல்வார் இழக்காதவாறு அப்பெருமைகள் விளங்கும்படி அருள் பாலிக்கும் திவ்ய தேசங்களை அனுபவிக்கிறார். அதில் திருக்கோஷ்டியூர் திவ்ய தேசத்தை பாடும் பொழுது, பஞ்சபூதங்களால் ஆன சரீரத்தாலும், பஞ்சமஹா யக்ஞங்கள் செய்து கொண்டும், பஞ்ச இந்திரியங்களால் யாதொரு குற்றமும் செய்யாது எம்பெருமானுக்கு அடிமைத் தொழில் புரியும் பாகவதர்களின் பாததூளி இவ்வுலகம் முழுவதையும் பரிசுத்தப்படுத்துவதாக அனுபவிக்கிறார். அப்படிப்பட்ட பரமபாகவதர்களுக்கு தான் அடிமை செய்ய வேண்டும் என்ற அவாவை, அவர்கள், வைணவத்தின் எல்லையான பாகவதர்களுக்கு ஆட்பட்டு தொண்டு புரிவதன் மேன்மையை நமக்கு காட்டி கொடுக்கிறார்.
இறைவனடி சேர்வதற்கு உரிய வேளை 'நம் சரீரம் நம் வசத்தில் இருக்கும் காலமே அன்றி நம் கட்டுக்கடங்காத முதிர்ச்சியில் அல்ல' என்பதை "அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்" என்று காட்டுகிறார்.
பகவானின் ஒப்பில்லாத பற்பல பெருமைகளையும் அனுபவித்து, அப்படிப்பட்ட உயர்ந்த பரம்பொருளான பகவானே! "நீ உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே" என்று திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் நீ உனக்கு இருப்பிடமாய் என்னை ஆக்கிக் கொண்டாயே! என்னே! உன் நீர்மை என்று உருகுகிறார். இப்படி பல பல அனுபவங்களால் பெரியாழ்வார் திருமொழி என்னும் பிரபந்தத்தை அருளிச் செய்துள்ளார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment