||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
023 ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே|
வசுதேவர் - தேவகிக்கு கிருஷ்ணர் பிறந்தார் சிறைச்சாலையில். நான்கு புஜங்கள். அவற்றுள் கதை, சங்கு, சக்கரம், தாமரை மலர், மார்பில் மருவாக ஸ்ரீவத்சம், பட்டுப் பீதாம்பரம், கழுத்தில் மாலை, வைர மணிமுடி, காதில் மின்னும் குண்டலங்கள். கண்ணன் அலங்காரப் புருஷனாகக் காட்சியளித்தார்.
வசுதேவர், குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த அவதாரப் புருஷன் மூலம் கம்சன் வதம் நடக்கப் போகிறதே! ஆனால் குழந்தை இப்படி இருந்தால் என பதபதைப்புடன் ஆழியை மறைத்துக் கொள் என்று கண்ணனிடத்தில் வசுதேவர் பிரார்த்திக்கிறார். இந்த அலௌகிகமான ரூபத்தை கண்ணனே நீ மறைத்து கொள் என்று பிரார்த்திக்கிறார். கம்சன் காதுக்கு செய்தி போய்விட்டால் என்ன ஆகுமோ தெரியலையே! என்று பயந்தார் வசுதேவர். அதனால் கண்ணனை பார்த்து "நீயே மூவுலகை ரட்சிக்கும் நாராயணன் என நான் அறிவேன், ஆனால், இந்தக் கோலம் உனக்கு இப்போது உசிதமல்ல.
உனது தெய்வ அம்சங்களான நான்கு தோள்கள், சங்கு, சக்கரத்தை மறைத்துக் கொள். இந்த உலகத்து குழந்தை போல இல்லாமல் தெய்வக் குழந்தை போன்ற ரூபத்தில் இருக்கிறாயே! இதை மறைத்துக் கொள்." என்று பிரார்த்தித்த மறு நிமிஷமே கண்ணன் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு மானிடக் குழந்தை ஆனார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அப்படி வசுதேவரை போல அனைத்தையும் மறைத்துக் கொள் என்று நான் பிரார்த்திக்க வில்லையே! பயமே தெரியாத எம்பெருமானுக்காக பரிவோடு பயந்து சொன்னாரே! அந்த பரிவு என்னிடம் இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment