About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

குழந்தைக்கு பெயர்சூட்டு விழா|

யாதவர்களுக்குக் குலகுருவாக கர்க்க மகரிஷி இருந்தார். அதனால் தம் குழந்தைகளுக்கு கர்க்கர் தாம் நாமகரணச் சடங்கு செய்ய வேண்டும் என்று வசுதேவர் விரும்பினார். ஆதலால் கோகுலம் வந்து குழந்தைகளுக்கு நாமகரணம் செய்து வைக்க வேண்டும் என்று கர்க்கரை வேண்டிக் கொண்டார். கர்க்கர் கோகுலம் வந்து சேர்ந்தார். நந்தகோபரும் யசோதையும் அவரை அன்போடும் பக்தியுடனும் வரவேற்றனர். கோகுலவாசிகள் எல்லோருமே அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். அந்த இரு பிள்ளைகளுக்கும் நாமகரணம் செய்து வைக்குபடி நந்தகோபர் கர்க்கரைக் கேட்டுக் கொண்டார். கர்க்கரும் அதே காரியமாகத்தான் அங்கே வந்திருந்தார். அதனால் நந்தகோபர் சொன்னதை அவர் உடனே ஒப்புக் கொண்டார். ஆனால் அந்த சடங்கை ஆடம்பரமின்றி செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். இல்லாவிட்டால் இந்த விஷயம் கம்சனுக்குத் தெரிய வரலாம், தான் நாம கரணம் செய்து வைத்ததனால் இந்தக் குழந்தைகளுக்கு எதோ முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்துத் தன்னைக் கொல்ல பார்க்கலாம் என்று அவர் சொன்னார்.


கர்க்கர் சொன்னதை நந்தகோபர் ஏற்றுக் கொண்டார். எல்லாச் சடங்குகளையும் கர்க்கர் மிகவும் எளிய முறையில் செய்து முடித்தார். பிறகு அவர், " இந்த ரோகிணியின் மகன், தன் அழகினால் எல்லோரையும் தன்னை மோகிக்கச் செய்கிறான். தன்னுடைய நற்பண்புகளால் இவன் தன் நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்விப்பான். அதனால் இவனை ராமன் என்று அழைப்போம். ஒரு காலத்தில் இவன் மிகுந்த பலசாலியாக விளங்குவான். அதனால் இவனை 'பலன்' என்றும் அழைக்கலாம். வசுதேவர் குடும்பத்தையும், நந்தகோபர் குடும்பத்தையும் இவன் இணைப்பதால் இவனை 'சங்கர்ஷணன்' என்றும் அழைக்கலாம்" என்று சொன்னார்.


பிறகு குழந்தையைப் பார்த்து, "இந்தக் குழந்தை கடவுளின் அவதாரம். இவன் கறுப்பாக இருப்பதனால் இவனைக் கிருஷ்ணன் என்று அழைக்கலாம். இவனுடைய தகப்பனாரின் பெயர் வசுதேவராதலால் இவன் வாசுதேவன் என்றும் அழைக்கப் படுவான். உனக்கும் கோகுலத்தில் உள்ள மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் இவன் உங்களுக்கு எத்தனையோ நலன்களை அளிக்கப் போகிறான். இவனை மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னார். 

சடங்குகள் முடிந்ததும், கர்க்கர் எல்லோரையும் ஆசீர்வதித்து விட்டு, தம் இருப்பிடம் திரும்பினார். நந்தகோபரும் யசோதையும் தாங்கள் பாக்கியசாலிகள் என்று மகிழ்ச்சி டைந்தார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment