About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 13

பூதத்தாழ்வார்

226. திவ்ய ப்ரபந்தம் - 2209 - கண்ணனே வேங்கடத்திலும் அரங்கத்திலும் உள்ளான்
இரண்டாம் திருவந்தாதி - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (28)
மனத்து உள்ளான் வேங்கடத்தான்* மா கடலான்,* 
மற்றும் நினைப்பு அரிய* நீள் அரங்கத்து உள்ளான்,* 
எனைப் பலரும் தேவாதி தேவன்* எனப்படுவான்,* 
முன் ஒரு நாள் மா வாய் பிளந்த மகன்|

227. திவ்ய ப்ரபந்தம் - 2227 - திருமால் எழுந்தருளிய திருத்தலங்கள்
இரண்டாம் திருவந்தாதி - ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (46)
பயின்றது அரங்கம் திருக்கோட்டி,* 
பல் நாள் பயின்றதுவும்* வேங்கடமே பல் நாள்,* 
பயின்றது அணி திகழும் சோலை* அணி நீர் மலையே* 
மணி திகழும் வண் தடக்கை மால்|

228. திவ்ய ப்ரபந்தம் - 2251 - எந்தை எழுந்தருளிய இடங்கள்
இரண்டாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்,* 
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை,* 
தமர் உள்ளும் மாமல்லை கோவல்* மதிள் குடந்தை என்பரே,* 
ஏ வல்ல எந்தைக்கு இடம்|

229. திவ்ய ப்ரபந்தம் - 2269 - அரங்கனை வழி படுபவர்க்கே அமரர் உலகு கிடைக்கும் 
இரண்டாம் திருவந்தாதி - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (88)
திறம்பிற்று இனி அறிந்தேன்* தென் அரங்கத்து எந்தை,*
திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால்,* 
திறம்பாச் செடி நரகை நீக்கி* தாம் செல்வதன் முன்,* 
வானோர் கடி நகர வாசல் கதவு|

பேயாழ்வார்

230. திவ்ய ப்ரபந்தம் - 2342 - திருக்கடிகையில் திருமால் எழுந்தருளி உள்ளான் 
மூன்றாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)
பண்டு எல்லாம் வேங்கடம்* பாற்கடல் வைகுந்தம்,* 
கொண்டுஅங்கு உறைவார்க்கு கோயில் போல்,* 
வண்டு வளம் கிளரும் நீள் சோலை* வண் பூங் கடிகை,* 
இளங்குமரன் தன் விண்ணகர்| (2)

231. திவ்ய ப்ரபந்தம் - 2343 - திருமால் எழுந்தருளி உள்ள திருத்தலங்கள் 
மூன்றாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (62)
விண்ணகரம் வெஃகா* விரி திரை நீர் வேங்கடம்,* 
மண் நகரம் மாமாட வேளுக்கை,*
மண்ணகத்த தென்குடந்தை* தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி,* 
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு|

திருமழிசை ஆழ்வார்

232. திவ்ய ப்ரபந்தம் - 2384 - நாராயணனை யானே நன்கறிந்தேன்
நான்முகன் திருவந்தாதி - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் 
பாலில் கிடந்ததுவும்* பண்டுஅரங்கம் மேயதுவும்* 
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார்*
ஞாலத்து ஒரு பொருளை* வானவர்தம் மெய்ப்பொருளை* 
அப்பில் அரு பொருளை யான் அறிந்த ஆறு?

233. திவ்ய ப்ரபந்தம் - 2411 - என் உள்ளத்தில் உறைபவன் திருமால்
நான்முகன் திருவந்தாதி - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (30)
அவன் என்னை ஆளி* அரங்கத்து அரங்கில்* 
அவன் என்னை எய்தாமல் காப்பான்* 
அவன் என்னது உள்ளத்து* நின்றான் இருந்தான் கிடக்குமே* 
வெள்ளத்து அரவு அணையின் மேல்|

234. திவ்ய ப்ரபந்தம் - 2417 - பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்
நான்முகன் திருவந்தாதி - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்* 
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்* 
நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்* 
அணைப்பார் கருத்தன் ஆவான்| (2)

235. திவ்ய ப்ரபந்தம் - 2441 - அரங்கா! உன்னையே நான் விரும்புவேன்!
நான்முகன் திருவந்தாதி - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
ஆள் பார்த்து உழி தருவாய்* கண்டு கொள் என்றும்* 
நின் தாள் பார்த்து உழி தருவேன்* தன்மையை* 
கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற* அரங்கனே* 
உன்னை விரும்புவதே* விள்ளேன் மனம்|

திருமங்கை ஆழ்வார்

236. திவ்ய ப்ரபந்தம் – 2706 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2) 
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே* 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்* 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| (2)

237. திவ்ய ப்ரபந்தம் – 2773 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்  
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)
மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை* 
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை*
மன்னும் அரங்கத்து எம் மா மணியை|

நம்மாழ்வார்

238. திவ்ய ப்ரபந்தம் - 2505 - பிரிவாற்றாத தலைவி வாடகைக்கு வருந்தி இரங்கல்
திருவிருத்தம் - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (28)
தண் அம் துழாய்* வளை கொள்வது யாம் இழப்போம்* 
நடுவே வண்ணம் துழாவி* ஓர் வாடை உலாவும்* 
வள் வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா* அருளாய்*
எண்ணம் துழாவுமிடத்து* உளவோ பண்டும் இன்னன்னவே?

239. திவ்ய ப்ரபந்தம் - 3464 - திருவரங்கா! என் மகள் திறத்து என்ன செய்யப் போகிறாய்?
திருவாய்மொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்* கண்ண நீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்*
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு? என்னும்* இரு நிலம் கை துழா இருக்கும்*
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!* இவள் திறத்து என் செய்கின்றாயே?

240. திவ்ய ப்ரபந்தம் - 3465 - முகில் வண்ணா! இத்தலைவியின் முடிவு தான் என்ன?
திருவாய்மொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி - இரண்டாம் பாசுரம்
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா? என்னும்* 
கண்ணீர் மல்க இருக்கும்*
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்? என்னும்* 
வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும்:*
முன் செய்த வினையே! முகப்படாய் என்னும்* 
முகில்வண்ணா! தகுவதோ? என்னும்*
முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய்*
என் கொலோ முடிகின்றது இவட்கே?

241. திவ்ய ப்ரபந்தம் - 3466 - மணி வண்ணா! இவளை என்ன தான் செய்து விட்டாய்?
திருவாய்மொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி - மூன்றாம் பாசுரம்
வட்கு இலள் இறையும் மணிவண்ணா! என்னும்* 
வானமே நோக்கும் மையாக்கும்*
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட* ஒருவனே! என்னும் உள் உருகும்*
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே! என்னும்*
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்!* இவள் திறத்து என் செய்திட்டாயே?

242. திவ்ய ப்ரபந்தம் - 3467 - அரங்கா! நீ என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?
திருவாய்மொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி - நான்காம் பாசுரம் 
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்* எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும்*
கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்* கடல் வண்ணா! கடியை காண் என்னும்*
வட்ட வாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்று என்றே மயங்கும்*
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய்* இவள் திறத்து என் சிந்தித்தாயே?

243. திவ்ய ப்ரபந்தம் - 3468 - அரங்கா! என் மகளை மயக்கி விட்டாயே!
திருவாய்மொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி - ஐந்தாம் பாசுரம்
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*
திருவரங்கத்துள்ளாய்! என்னும் வந்திக்கும்* 
ஆங்கே மழைக் கண் நீர் மல்க* வந்திடாய் என்று என்றே மயங்கும்*
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே* அலை கடல் கடைந்த ஆர் அமுதே*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே|

244. திவ்ய ப்ரபந்தம் - 3469 - பாம்பணையாய்! நான் என்ன தான் செய்வேன்?
திருவாய்மொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி - ஆறாம் பாசுரம்
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்னும்* மா மாயனே! என்னும்,* 
செய்ய வாய் மணியே! என்னும்* 
தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும்* விண்ணோர் முதல்! என்னும்,* 
பை கொள் பாம்பு அணையாய்! இவள் திறத்து அருளாய்* 
பாவியேன் செயற்பால் அதுவே|

245. திவ்ய ப்ரபந்தம் - 3470 - கடல் வண்ணா! என் மகள் கண்ணீர் சிந்துகிறாளே!
திருவாய்மொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி - ஏழாம் பாசுரம்
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* பற்றிலார் பற்ற நின்றானே* 
கால சக்கரத்தாய்! கடல் இடம் கொண்ட* கடல் வண்ணா! கண்ணனே! என்னும்*
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என்னும்* 
என் தீர்த்தனே என்னும்* 
கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும்* 
என்னுடைக் கோமளக் கொழுந்தே|

246. திவ்ய ப்ரபந்தம் - 3471 - என் மகள் புலம்புகிறாளே! நான் என் செய்வேன்?
திருவாய்மொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி - எட்டாம் பாசுரம்
கொழுந்து வானவர்கட்கு என்னும்* 
குன்று ஏந்தி கோ நிரை காத்தவன்! என்னும்* 
அழும் தொழும் ஆவி அனல எவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே! என்னும்*
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்* 
எங்ஙனே நோக்குகேன்? என்னும்* 
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்!* என் செய்கேன் என் திருமகட்கே?

247. திவ்ய ப்ரபந்தம் - 3472 - கண்ணா! என் மகளின் முடிவு தெரியவில்லையே!
திருவாய்மொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி - ஒண்பதாம் பாசுரம்
என் திருமகள் சேர் மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே! என்னும்* 
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே! என்னும்*
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்* 
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!* 
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே| (2)

248. திவ்ய ப்ரபந்தம் - 3473 - அரங்கா! என் மகள் நின் திருவடியில் சரணடைந்தாள்
திருவாய்மொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி - பத்தாம் பாசுரம்
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்* மூவுலகு ஆளியே என்னும்*
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும்* நான்முகக் கடவுளே என்னும்*
வடிவு உடை வானோர் தலைவனே என்னும்* வண் திருவரங்கனே என்னும்*
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள்* 
முகில்வண்ணன் அடியே|

249. திவ்ய ப்ரபந்தம் - 3474 - இவற்றைப் படித்தோர் பேரின்பத்தில் மூழ்குவர்
திருவாய்மொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருவாய்மொழி - பதினொன்றாம் பாசுரம்
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்* 
மொய் புனல் பொருநல்*
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன்* 
வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்*
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை* 
ஆயிரத்து இப் பத்தும் வல்லார்*
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment