About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

த்யான ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 3

||ஓம் நமோ பகவதே வாஸுதேவாய||

ஸா²ந்தா காரம் பு⁴ஜக³ ஸ²யநம் 
பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
விஸ்²வாதாரம் க³க³ந ஸத்³ருஸ²ம் 
மேக⁴ வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|

  • ஸா²ந்தா காரம் - சாந்தத்தின் உருவம்
  • புஜக³ - பாம்பு
  • ஸ²யநம் - படுக்கை
  • பத்³மநாபம் - தொப்புளில் தாமரையை உடையவர்
  • ஸுரேஸ²ம் - தேவர்களின் இறைவன்
  • விஸ்²வாதாரம் - பிரபஞ்சத்தின் உருவம்
  • க³க³ந - வானம்
  • ஸத்³ருஸ²ம் - ஒப்பிடத்தக்கது
  • மேக வர்ணம் - மேகம் போன்ற கரு நீல நிறம்
  • ஸு²ப - அழகான, மங்களகரமான
  • அங்க³ம் - உடல் உறுப்புகள்


லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் 
யோகி³ ஹ்ருத்³ த்⁴யாந க³ம்யம்
வந்தே³ விஷ்ணும் ப⁴வ ப⁴ய ஹரம் 
ஸர்வ லோகைக நாத²ம்||

  • லக்ஷ்மீ காந்தம் - லட்சுமி தேவியை கவர்ந்திழுப்பவர்
  • கமல - தாமரை
  • நயநம் - கண்
  • யோகி³ - பகவானின் மீது முழு கவனம் செலுத்துபவர்
  • ஹ்ருத்³ - இதயம்
  • த்⁴யாந - தியாநம்
  • க³ம்யம் - அடையக் கூடியது
  • வந்தே³ - வணங்குகிறேன்
  • விஷ்ணும் - விஷ்ணுவை
  • ப⁴வ - உலக இருப்பு
  • ப⁴ய - பயம்
  • ஹரம் - அழிப்பார்
  • ஸர்வ - அனைத்தும்
  • லோக - உலகம்
  • ஏகா - மட்டும், என்றும்
  • நாத²ம் - தலைவர்


பெருமான் சாந்தமே வடிவானவர்; திருவனந்தாழ்வானாகிற திருவணை மேல் பள்ளி கொள்பவர்; நாபியில் தாமரைப் பூவை அழகாகப் பெற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்; உலகுக்கு ஆதாரமாய் இருப்பவர். ஆகாயம் போல் பரந்துள்ளவர்; மேக வண்ணர்; அனைத்து லக்ஷணங்களும் பொருந்திய திருமேனி உடையவர்; திருமகளின் உள்ளத்தைக் கவர்ந்தவர்; செந்தாமரைக் கண்ணர்; யோகத்தில் இருந்து கொண்டு தியானிக்கும் ரிஷிகளின் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவர்; பிறவிப் பிணியைப் போக்குபவர்; அனைத்துலகுக்கும் தலைவர். இத்தகைய மகா விஷ்ணுவை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment