About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

த்யான ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 4

மேக⁴ ஸ்²யாமம் பீத கௌஸே²ய வாஸம்
ஸ்ரீவத் ஸாங்கம் கௌஸ்து போ⁴த்³ பா⁴ஸி தாங்க³ம்|
புண்யோ பேதம் புண்ட³ரீ காய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே³ ஸர்வ லோகைக நாத²ம்||


நம: ஸமஸ்த பூ⁴தாநாம் 
ஆதி³ பூ⁴தாய பூ⁴ப்⁴ருதே|
அநேக ரூப ரூபாய 
விஷ்ணவே ப்ரப⁴ விஷ்ணவே||

  • பீத - மஞ்சள்
  • கௌஸே²ய - பட்டு
  • வாஸம் - உடை, வஸ்திரம்
  • ஸ்ரீவத்ஸம் - தாங்குபவர்
  • அங்கம் - குறி
  • கௌஸ்துபம் - ரத்தினம்
  • உத்³ பாஸி தாங்க³ம் - அலங்கரிக்கப்பட்ட மற்றும் அங்க என்பது உடலின் ஒரு பகுதியாகும்
  • புண்யா - ஆசீர்வதிக்கப்பட்ட நபர்
  • உபேதம் - சூழப்பட்டுள்ள
  • புண்ட³ரீ கா - தாமரை
  • ஆயதா - நீளம் மற்றும் அகலம்
  • அக்ஷம் - கண்
  • விஷ்ணும் வந்தே³ - நான் விஷ்ணுவை வணங்குகிறேன்
  • ஸர்வ - அனைத்து
  • லோக - உலகம்
  • ஏகா - மட்டும், என்றும்
  • நாத²ம் – தலைவர்

மழை மேகங்களின் ஆழமான கருநீல நிறத்தை உடைய திருமேனியர்; கவர்ச்சிகரமான மஞ்சள் நிற பட்டு உடையில் அலங்கரிக்கப்பட்டவர்; திருமார்பில் அற்புதமான ஸ்ரீ வத்ஸம் எனப்படும் முத்திரையால் அலங்கரிக்கப்பட்டவர்; தன் உடம்பில் கௌஸ்துப ரத்தினத்தின் பிரகாசத்தை ஒளிரச் செய்பவர்; ஆசீர்வதிக்கப்பட்ட புண்ணிய மக்களால் தொடர்ந்து சூழப் பெற்றவர்; தாமரை மலரைப் போல நீளமாகவும் அகலமாகவும் அழகாகவும் திருக்கண்களை உடையவர்; எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற தலைவர். இப்படிப்பட்ட மகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment