||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.19
வயம் து ந வித்ருப் யாம
உத்தம ஸ்²லோக விக்ரமே|
யத் ச்²ருண் வதாம் ரஸ ஜ்ஞாநாம்
ஸ்வாது³ ஸ்வாது³ பதே³ பதே³||
- வயம் து - நாங்களோ எனில்
- உத்தம ஸ்²லோக விக்ரமே - பகவானுடைய பராக்ரமங்களைக் கேட்பதில்
- ந வித்ருப் யாம - திருப்தி அடையோம். மேலும் மேலும் கேட்பதில் விருப்பமுள்ளவர்களாகவே ஆவோம்
- யத் - எந்த பகவானின் பண்புகள்
- ச்²ருண் வதாம் - கேட்கின்றவர்களுக்கும்
- ரஸ ஜ்ஞாநாம் - ரஸத்தை அறிந்தவர்களுக்கும்
- பதே³ பதே³ - ஒவ்வொரு க்ஷணமும் கேட்கக் கேட்க
- ஸ்வாது³ ஸ்வாது³ - இனிக்கும் தன்மை எனவோ
மேலான புகழ் வாய்ந்த பகவானது திருவிளையாடல்களைக் கேட்பதில் ஆர்வமுடைய எங்களுக்கு, அதை கேட்பதில் போதும் என்கிற மனநிலை (திருப்தி) இன்னும் ஏற்படவில்லை. ஏனெனில், அதன் உண்மையான இனிய இன்பத்தை உணர்ந்த அடியவர்களுக்கு, அதன் ஒவ்வொரு சொல்லும் இன்பம் தருவதாக இருக்கிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment