||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
025 அநுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே|
அணிலங்கள் என்றால் அணில். யாத்திரை போகும் பொழுது பின்னாடியே போவதற்கு அனுயாத்திரை என்று பெயர்.
ஸ்ரீராமர், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதா பிராட்டியை லங்கைக்குச் சென்றால் தானே மீட்க முடியும், ராவணனையும் வதம் செய்ய முடியும்.
அதற்குக் கடலைக் கடந்தாக வேண்டும். கடலைக் கடப்பதெனில் கடல் பாலம் ஒன்றை அமைத்திட வேண்டும். ராமர் சேது கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது, கடலில் பாலம் கட்ட அவருக்கு வானரங்கள் உதவி செய்தன. அனைவரும் வேக வேகமாக கல்லை கொண்டு போய் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கற்கள் நன்றாக மிதந்து கொண்டிருந்தது. பாறைகளைத் தான் போட்டனவேத் தவிர பாறைகளுக்கு இடையே பூச்சு வேலை நடைபெறவில்லை.
அப்பொழுது பக்கத்தில் இருந்த அணில்கள் இதை பார்த்துக் கொண்டிருந்தது. குரங்கிற்கு கட்ட தெரியவில்லையே! கல்லை மட்டும் போட்டால் கட்டிடம் நிற்காதே! குறுக்க குறுக்க மணலைக் கொட்டி பூசினால் தானே நிற்கும்! ராமருக்கு காலை போஜனம் ஆகிவிட்டது. மதிய போஜனம் குள் போய் சேர வேண்டுமே! குரங்குகள் மெதுவாக வேலை செய்கிறதே! நாம் போய் பூசுவோம் என்று நினைத்து, நீரில் தங்களை நனைத்துக் கொண்டு பின் மணலில் புரண்டு தன் உடம்பில் ஒட்டிக் கொண்டு போய் கல்லுக்குள் ஒவ்வொரு இடுக்கிலும் ஓடி ஓடி மணலை உதிர்த்து விடுகிறது பூச்சு வேலைக்கு உதவுவது போல.
பெரு யாத்திரை செல்லும் பாறைகளைத் தூக்கிச் செல்லும் வானரங்களுடன், உடலில் மணலை ஒட்டிக் கொண்டு அணில்கள் அனுயாத்திரை செய்தன.
அப்படி, அணில்களும், குரங்குகளும் ஸ்ரீராமருக்கு கைங்கர்யம் செய்ததைப் போல ஏதும் செய்யாது மரம் போன்ற மனதுடன் இருப்பதாக தொண்டரடிப் பொடி ஆழ்வார் வருந்தி பாடியுள்ளார்
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அணில் செய்த அந்த கைங்கர்யம் மிகவும் சிறியது தான். ஆனால் அந்த அளவு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கூட எனக்கு இல்லையே. அணிலை போல் ஓடி ஓடி நான் எதுவும் கைங்கர்யம் பண்ணலையே! ராமரை தொடர்ந்து போகவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment