||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
022 தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே|
வசுதேவரின் மனைவி தேவகி. தேவகியின் சகோதரன் கம்சன். வசுதேவர் - தேவகிக்கு பிறக்கப் போகும் எட்டாவது குழந்தை, கம்சனுக்கு எமன் ஆவான். இதைக் கேள்விப்பட்ட கம்சன் அவர்களைக் கொல்ல முயற்சிக்கிறான். அப்போது, தேவகி, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளை, அவனிடமே தந்து விடுவதாகக் கூற, கம்சனும், அவர்களை மதுரை சிறையில் அடைக்கிறான்.
என்ன நோன்பு நோற்றார்களோ இவனை பெற்ற வயிருடையாள் என்று சொல்வதற்கு ஏற்ப மஹாத்மாவான கண்ணன் தேவகியின் வயிற்றில் வந்தான். பத்து மாதம் சுமந்து ஒரு தெய்வத்தை பெற்றெடுத்தாள். தெய்வம் என்பது பிறப்பதில்லை. பிறவாத எம்பெருமானை தன் கர்ப்பத்தில் வைத்திருந்து பெற்றெடுத்தாள். பிறந்த உடனே கண்ணன் சாமான்ய குழந்தையாக இருக்கவில்லை.
சதுர் புஜத்தோடே, எல்லா திவ்ய ஆயுதங்களோடே, சகல ஆபரணங்களோடே சேவை சாதித்தான். இதை பார்த்த தேவகி, "நீ யார்?'' என்று கேட்டாள்."என் அவதார ரஹஸ்யத்தை சொல்கிறேன்! நீங்கள் தான் கிருஷ்ணீ என்றும், சுதபா என்றும் பெயர் கொண்டவர்களாக என்னை குறித்து தவம் புரிந்தீர்கள். என்ன வேண்டும் என்று கேட்டேன். மூன்று முறை என் கர்ப்பத்தில் பிறக்க வேண்டும் என்று கேட்டீர்கள். அப்போ கிருஷ்ணீ கர்பனா முதல் முறை பிறந்தேன். அடுத்தது அதிதிக்கும் காசியபருக்கும் வாமன மூர்த்தியாக இரண்டாவது முறையாக பிறந்தேன். இப்போ மூன்றாவது முறையாக கண்ணனாக பிறந்திருக்கிறேன். உனக்கு குடுத்த வரத்தை பூர்த்தி பண்ணி விட்டேன்” என்று கண்ணன் கூறினார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “எம்பெருமானையே கர்ப்பத்தில் சுமந்து பெற்றெடுத்தாளே! அதை போல நான் பண்ணவில்லையே! கண்ணனோடு நான் எந்த சம்பந்தமும் நான் படலையே! தன் தவத்தின் பயனால் ஒரு தெய்வத்தை பெற்றாள். அப்படி ஒரு பக்தியோ பாவசுத்தியோ எனக்கு இல்லாமல் போய் விட்டதே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment