About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1 - 1 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - 10 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 13 - 22

கண்ணன் திருவவதாரச் சிறப்பு

கலிவிருத்தம்

பிறந்த நாளை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். கண்ணன் பிறந்த நாள் எப்படிக் கொண்டாடப்படுகிறது! திருவாய்பாடியில் நந்தகோபருடைய அழகிய திருமாளிகையில் கேசவன் என்ற திருநாமத்துடன் கண்ணனாக திருவவதரித்தபோது கோகுலவாசிகள் அளவில்லா உத்ஸாகத்தை அடைந்தார்கள். பக்தியின் எல்லையைக் கடந்தவர்களின் செயல் இப்படித்தான் இருக்கும்! 


குழந்தை கண்ணன் யார்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகக் கூறிப் புகழ்கிறார்கள். கண்ணன் பிறந்த சந்தோஷத்தை எப்படியெல்லாம் ஆயர்பாடியர்கள் கொண்டாடினார்கள் என்பதை மிக ஆச்சர்யமாக சித்தரிக்கிறார் ஆழ்வார். ஆனால் ஒன்று மட்டும் உறுதி! பலரும் பல வகையாகப் புகழ்வதற்கு ஏற்ற தகுதியுடையவன் அவன் ஒருவனே!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment