||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
019 அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே|
இராவணனன் தோற்று போய் கீழே விழுந்து கிடக்கிறான். "நீ உன் இந்திரியங்களுக்கு தோற்று போனாயே தவிர ராமனுக்கு தோற்கவில்லை" என்று மண்டோதரி கூறினாள். அருகில் தனுசை கீழே வைத்து பிடித்து கொண்டு எட்டடி உயரத்தில் இருக்கும் ராமனை சேவிக்கிறாள் மண்டோதரி.
அப்பொழுது சொல்கிறாள். "இவர் யார் என்று தெரிந்து விட்டது. இவர் சாமான்ய மனிதர் இல்லை. இவர் தான் மகாயோகி. இவர் தான் பரமாத்மா. இவர் தான் தெய்வம். ஊராரே! உங்கள் எல்லோருக்கும் தெரியும் படி சொல்கிறேன்." என்றாள் மண்டோதரி. கணவனை பறிகொடுத்த மண்டோதரி வெசவு பாடுவதற்காக வந்தாள். ஆனாலும் ராமரை சேவித்த அந்த வினாடி அவர் உயர்ந்தவர் என்று தெரிந்து கொண்டு விட்டாள். “அவனே தெய்வம். தெய்வத்தின் கையாலே என் கணவன் மாண்டு போனான்” என்று எல்லோரிடமும் சொல்லி ராமனுடைய பெருமையை வெளிப்படுத்தினாள். கணவனை கொன்றவரை திட்டாமல் அவனே தெய்வம் என்ற உண்மையை, உண்மை என்று ஒப்பு கொண்டாள்.
விழுந்து கிடக்கும் கணவரைப் பார்த்து, “உங்கள் சக்தி அளப்பறியது. இருப்பினும் ராமனை உங்களால் எதிர்க்க முடியாது. மிகுந்த தவ வலிமையிலும், அதனால் பெற்ற வரத்தினாலும் நீங்கள் கர்வம் அடைந்துள்ளீர்கள். அதனால் இப்புவிக்கு பாரமாகி விட்டீர்கள். இந்த ராமன், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டீர்கள்" எனக் கூறுகிறாள். ஆக மண்டோதரி ராமனை ஒரு அவதாரமாகவேக் காண்கிறாள்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “இப்படி மண்டோதரிக்கு இருந்த நல் அறிவு எனக்கு இல்லையே! பரமாத்மா விஷயமான விக்ஞானம் எனக்கு இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment