||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.13
தந்ந꞉ ஸு²ஸ்²ருஷ மாணாநாம்
அர்ஹஸ் யங்கா³நு வர்ணிதும்|
யஸ்யாவ தாரோ பூ⁴தாநாம்
க்ஷேமாய ச ப⁴வாய ச||
- அங்க³ - ஹே! ஸூத மகரிஷே!
- தத் ஸு²ஸ்²ருஷ மாணாநாம் - அதனைக் கேட்க விருப்பமுள்ளவர்கள் ஆன
- தந்நஸ் - எங்களுக்கு
- அநு வர்ணிதும் - எடுத்துச் செல்வதற்கு
- அர்ஹஸி - யோக்கியர் ஆகிறீர்
- யஸ்ய அவதாரோ - எந்த மஹாவிஷ்ணுவினுடைய அவதாரமானது
- பூ⁴தாநாம் - ஸகல ஜீவராசிகள் உடைய
- க்ஷேமாய ச - க்ஷேமத்தைப் பொருட்டும்
- ப⁴வாய ச - காப்பாற்றுதலின் பொருட்டும் உள்ளதோ
ஓ ஸூத புராணிகரே! அந்த ஸ்ரீகிருஷ்ணா அவதார சரித்திரங்களைக் கேட்க, நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம். பகவானது அவதாரம் அனைத்து ஜீவராசிகளையும் காத்தல் பொருட்டும், அவைகளின் நலத்தின் பொருட்டும் அன்றோ நிகழ்ந்தது. ஆகவே, அதைத் தெளிவாக எங்களுக்கச் சொல்ல வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment