||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.14
ஆபந்ந: ஸம்ஸ்ருதிம் கோ⁴ராம்
யந்நாம விவஸோ² க்³ருணந்|
தத꞉ ஸத்³யோ விமுச்யேத
யத்³பி³பே⁴தி ஸ்வயம் ப⁴யம்||
- கோ⁴ராம் ஸம்ஸ்ருதிம் - மிக பயங்கரமான சம்சார பந்தத்தில்
- ஆபந்நஸ் - ஈடுபட்டும்
- விவஸோ² - எவன் ஒருவன் காலவசத்தை அடைந்தவனாய் கொண்டும்
- யந்நாம க்³ருணந்நு - எந்த மகாவிஷ்ணுவின் நாமாவை சொல்கிறவனாய் கொண்டு
- ததஸ் - அந்த சம்சார பந்தத்திலிருந்து
- ஸத்³யோ - உடனேயே
- விமுச்யேத - விடுபடுகிறானோ
- யத்³ - யாதொரு நாமாவிடமிருந்து
- ப⁴யம் ஸ்வயம் - பயமானது தானே
- பி³பே⁴தி – பயப்படுகிறதோ
மிகவும் பயங்கரமான பிறப்பு இறப்பு என்னும் உலகியலான சம்சாரக் கடலில் மூழ்கித் தவிப்பவன், வேறு வழியின்றி தன்னிச்சையில்லாமல் பகவானது திருநாமங்களை உச்சரிப்பானேயானால், அக்கணமே அவன் இந்தப் பிறவிக் கடலிலிருந்து விடுபடுகிறான். ஏனென்றால், பகவானது திருநாமத்தின் முன் பயம் என்பது விலகிப் போகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment