About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 13 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பூர்வ நியாஸம்
மூன்றாம் பாகத்திலுள்ள ஸ்லோகங்கள் 
உரைநடையாக அநுசந்திக்கும் முறை 
இனி சொல்லப்படுகிறது.

பூர்வ நியாஸ:

அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் தி³வ்ய 
ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய|
ஸ்ரீ வேத³ வ்யாஸோ ப⁴க³வாந் ரிஷி:|
அநுஷ்டுப் ச²ந்த³:|
ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா 
ஸ்ரீமந் நாராயணோ தே³வதா|


ரிஷி: - ரிஷிஹி
ச²ந்த³: - ச²ந்த³ஹ
விஷ்ணு: - விஷ்ணுஃ
----
அம்ருதாம் ஸூ²த்³ ப⁴வோ பா⁴நுரிதி பீ³ஜம்|
தே³வகீ நந்த³ந: ஸ்ரேஷ்டேதி ஸ²க்தி:||
உத்³ப⁴வ: க்ஷோப⁴ணோ தே³வ இதி பரமோ மந்த்ர:|
ஸ²ங்க² ப்⁴ருந் நந்த³கீ சக்ரீ தி கீலகம்||


நந்த³ந: - நந்த³நஸ்
ஸ²க்தி: - ஸ²க்திஹி
உத்³ப⁴வ: - உத்³ப⁴வஹ
மந்த்ர: - மந்த்ரஹ
----
ஸா²ர்ங்க³ த⁴ந்வா க³தா³த⁴ர இத் யஸ்த்ரம்|
ரதா²ங்க³ பாணி ரக்ஷோப்⁴ய இதி நேத்ரம்||
த்ரிஸாமா ஸாமக³: ஸாமேதி கவசம்|
ஆநந்த³ம் பர ப்³ரஹ்மேதி யோநி:||


ஸாமக³: - ஸாமக³ஸ்
யோநி: - யோநிஹி
----
ருது: ஸுதர்ஸ²ந: கால இதி தி³க்³ ப³ந்த⁴:|
ஸ்ரீ விஸ்²வரூப இதி த்⁴யாநம்|
ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே²| 
ஸஹஸ்ர நாம ஜபே விநியோக³:||


ருது: - ருதுஸ்
ஸுதர்ச’ந: - ஸுதர்ச’நஹ்
ப³ந்த⁴: - ப³ந்த⁴ஹ
விநியோக³: - விநியோக³ஹ

விஷ்ணுவின் இந்த திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மகா மந்திர நாம ஸ்தோத்ர: மகா மந்திரத்துக்குப் பகவான், வேத வியாசர் ரிஷி; அநுஷ்டுப் சந்தஸ்; பரமாத்வான ஸ்ரீமகா விஷ்ணு - ஸ்ரீமந்நாராயணன் தேவதை; சந்திர குலத்து உதித்த சூரியன் குல விளக்கு என்பது பீஜம் (மூலகாரணம்); தேவகீ நந்தனாகிய ஸ்ரீ கிருஷ்ணன் சக்தி; உத்பவ: - க்ஷோபணோ தேவ; என்பது இதன் உயர்ந்த மந்திரமாம்; திருவாழி, திருச்சக்கரம், நாந்தக வாள் ஏந்தியவன் கீலகம் (அச்சாணி); இதன் காப்பு (கவசம்) த்ரிஸாமா ஸாமக; ஸாம; ஆநந்தம் பர ப்ரஹ்ம என்பது யோநி (கர்ப்பம்); ருதுஸ் ஸுதர்சந: - கால என்பது திக்குகளை அடக்கிப் பரப்பு; எத்திக்கிலிருந்தும் தீமை வராமல் இந்த மகா மந்திரத்தால் காப்பு; எங்கும் நிறைந்தவர் என்பது தியானம், எம்பெருமானுக்குக் கைங்கர்யமாக அவருடைய திருநாமங்களை அநுஸந்தித்துத் தொழுதல் அதாவது ஸ்ரீமஹா விஷ்ணுவின் திருவருள் சித்திக்கும் பொருட்டு ஸஹஸ்ரநாம ஜபத்தில் இதற்குப் பயன் என்பதாம்.

மூன்றாம் பகுதி ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் முற்றுப் பெறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment