||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
027 ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே|
அகத்தியர், சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்தரிஷிகளில் ஒருவராகவும் அறியப் பெறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபா முத்திரை. அகத்தியர், ஒரு இசைப் போட்டியில், மலையை உருக வைத்து, இராவணனை வென்றவராகவும் அறியப் பெறுகிறார்.
அவர்கள் விடை பெரும் நேரம், முக்காலமும் அறிந்த அகத்தியர், அவை “எதிர் வரும் காலத்தில் நீ சந்திக்க நேரும் அசுரர்களை இவ்வாயுதங்கள் கொண்டு வீழ்த்துவாயாக!” என்றார்.
தண்டகாரண்யத்தில் உள்ள முனிவர்களின் ஆசிரமங்களில் இளவலுடனும் பிராட்டியுடனும் தங்கியிருந்து, முனிவர்களுக்கு அரக்கர்களால் துன்பம் ஏற்படாதபடி பத்து ஆண்டுகள் காப்பாற்றுகிறார்.
பிறகு, அந்த முனிவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் அகத்திய முனிவரின் ஆசிரமத்துக்குச் செல்கின்றார்.
அகத்தியர் ராமனை வரவேற்று அவனுக்கு ஆசனம் அளிக்கிறார். அவரும் அவரை வணங்கி நிற்கின்றார். ஸ்ரீ ராமர் எதிர் கொள்ள போகும் போரினை அறிந்து, ஸ்ரீ இராமருக்கு மூன்று ஆயுதங்களை அன்பளிப்பாக வழங்கினார். பல காலமாக சிவபெருமான் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த சிவ தனுசுவை அகத்தியர் இராமனிடம் கொடுக்கிறார். இந்த உலகம் முழுவதையும் ஒரு தராசு தட்டினில் நிறுத்தி அகத்தியர் அளித்த வாள் ஒன்றினையும் வைத்தால் கூட அந்த வாளுக்கு இணையாகாது என்று கம்பர் சொல்கிறார்.
ஒரு சமயம் திரிபுரத்தை சிவபெருமான் மேருவை வில்லாக வளைத்து, மகாவிஷ்ணுவை அம்பாகக் கொண்டு எரித்ததாக புராணங்கள் சொல்லும் அப்படிப்பட்ட அம்பினையும் வாளினையும் அகத்தியர் ராமனுக்கு அளிக்கிறார். மகாவிஷ்ணு தேவர்களை அசுரர்களிடம் இருந்து காப்பாற்ற விஸ்வகர்மாவே செய்த வில், எடுக்க எடுக்க குறையாத அம்புகளை வழங்கும் அம்பறாத்துணி (அம்புக்கூடு), போர் வாள்!
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அகத்தியர் போல் வரும் இன்னல்களை அறிந்து, ஸ்ரீ இராமருக்கு உதவி புரிந்தேனா? எம்பெருமானுக்கு நான் ஆயுதங்களைக் கொடுக்கவில்லயே! ”ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment