About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 16 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் - 7

சந்த்³ராநநம் சதுர் பா³ஹும் 
ஸ்ரீவத் ஸாங்கித வக்ஷஸம்|
ருக்மிணீ ஸத்ய பா⁴மாப்⁴யாம் 
ஸஹிதம் க்ருஷ்ண மாஸ்²ரயே||

  • சந்த்³ராநநம் - சந்திரனைப் போன்ற முகம் உடையவர்
  • சதுர் - நான்கு
  • பா³ஹும் - திருக்கைகள்
  • ஸ்ரீவத் ஸாங்கித வக்ஷஸம் - திருமார்பில் ‘ஸ்ரீவத்ஸா’ என்ற அழகிய முத்திரை
  • ருக்மிணீ ஸத்ய பாமாப்யாம் - ருக்மிணி மற்றும் சத்யபாமா
  • ஸஹிதம் - ஆகியோருடன் உள்ள
  • க்ருஷ்ண மாஸ்²ரயே - நான் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைகிறேன் 
சந்திரனைப் போல் அழகும் குளிர்ச்சியும் உடைய முகத்தினரும், நான்கு திருக்கரங்களை உடையவரும், ஸ்ரீவத்ஸம் தோன்றும் திருமார்பினரும், ருக்மணி சத்யபாமை ஆகிய இருவருடனும் சேர்ந்து விளங்குபவருமாகிய ஸ்ரீ கிருஷ்ணரைச் சரணடைகிறேன்.

||த்யான ஸ்லோகங்கள் முடிவுற்றன||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

1 comment: