About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 16 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.15

பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ²
தே³வ த³த்தம் த⁴நஞ்ஜய:|
பௌண்ட்³ரம் த³த்⁴மௌ மஹா ஸ²ங்க²ம்
பீ⁴ம கர்மா வ்ருகோ த³ர:||

  • பாஞ்சஜந்யம் - பாஞ்சஜந்யம் எனும் சங்கு 
  • ஹ்ருஷீகேஸ²ஹ - ரிஷிகேசர் (பக்தர்களின் புலன்களை வழிநடத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்) 
  • தே³வ த³த்தம் - தேவதத்தம் எனும் சங்கு 
  • த⁴நஞ்ஜயஹ - தநஞ்ஜயன் (செல்வத்தை வெல்பவான அர்ஜுனன்) 
  • பௌணட்³ரம் - பௌண்ட்ரம் எனும் சங்கு 
  • த³த்⁴மௌ - முழங்கினார்கள் 
  • மஹா ஸ²ங்க²ம் - அச்சமூட்டும் சங்கு 
  • பீ⁴ம கர்மா - வீர தீரச் செயல்களைப் புரிபவனான 
  • வ்ருகோ த³ரஹ - பெருந் தீனிக்காரன் (பீமன்)

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் எனும் தனது சங்கை முழங்கினார். செல்வத்தை வெல்வனான அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கையும், வீரதீர செயல்களைப் புரிபவனான பெருந்தீனிக்காரனும் வீர தீர சாகசங்களைப் புரிபவனுமான பீமன் பௌண்ட்ரம் எனும் அச்சமூட்டும் சங்கையும் முழங்கினர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment