||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 7
அக்³ராஹ்ய: ஸா²ஸ்²வத: க்ருஷ்ணோ
லோஹி தாக்ஷ: ப்ரதர் த³ந:|
ப்ரபூ⁴த ஸ்த்ரிக குப்³தா⁴ம
பவித்ரம் மங்க³ளம் பரம்||
- 56. அக்³ராஹ் யஸ்² - கிரகிக்க முடியாதவர். தானே காரணமாகவும், கர்த்தாவாகவும் இருப்பவர். மற்றவர்களின் பிடிக்கு அப்பாற்பட்டவர்.
- 57. ஸா² ஸ்²வதோ - நிரந்தரமாக இருப்பவர்.
- 58. க்ருஷ்ணோ - மிகுந்த மகிழ்ச்சி உடையவர். நிரந்தரமான பேரின்ப நிலையில் இருக்கிறார்.
- 59. லோஹி தாக்ஷஃ - செந்தாமரை போன்று சிவந்த கண்கள் உடைய கண்ணன்.
- 60. ப்ரதர் த³நஹ - பிரளய காலங்களில் எல்லாவற்றையும் அழிப்பவர், தன்னுள் மறைத்து வைத்திருப்பவர்.
- 61. ப்ரபூ⁴த - நிறைந்தவர். செல்வச் செழிப்பு மிக்கவர். மகத்துவம் மிக்கவர்.
- 62. ஸ்த்ரிக குப்³தா⁴ம - பரமபதத்தை இருப்பிடமாக உடையவர். மூன்று முகப்புகளை உடைய வராகமாக அவதரித்தவர்.
- 63. பவித்ரம் - தூய்மையான வடிவினை உடையவர்.
- 64. மங்க³ளம் பரம் - சிறந்த மங்களமாய் இருப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment