About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 36

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 6

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ²: 
பத்³ம நாபோ⁴ அமரப்ரபு⁴:|
விஸ்²வ கர்மா மநுஸ் த்வஷ்டா 
ஸ்த²விஷ்ட²: ஸ்த²விரோ த்⁴ருவ:||

  • 46. அப்ரமேயோ - அறிவுக்கு எட்டாத பெருமைகளை உடையவர். அளவிட முடியாதவர். வரையறுக்க முடியாதவர், ஐந்து புலன்களால் உணர முடியாது.
  • 47. ஹ்ருஷீகேஸ²ஃ - இந்திரியங்களை அடக்கி ஆள்பவர். இந்திரியங்களின் இறைவன். சூரியன் மற்றும் சந்திரன் வடிவத்தில் மகிழ்ச்சியின் கதிர்களை பரப்புகிறவர்.
  • 48. பத்³மநாபோ⁴ - நாபியிலிருந்து நீண்ட தண்டையுடைய தாமரைப்பூ அழகன். பிரபஞ்சத்தின் ஆதாரமாக இருப்பவர். படைப்பாளியான பிரம்மாவின் இருப்பிடமாக அனைத்து படைப்புகளுக்கும் அவர் தான் அடிப்படைக் காரணம். தொப்புள் கொடி போன்ற ஒன்றால் தாங்கப்பட்ட அவரது நாபியிலிருந்து (தொப்புள்) பத்மம் (பிரபஞ்சம்) வெளிப்படுகிறது.
  • 49. அமரப் ரபு⁴ஹு - தேவர்கள் தலைவனாயிருந்து நிர்வாகம் செய்பவர்.
  • 50. விஸ்²வ கர்மா - உலக நடைமுறைகளைத் தானே செய்பவர்.
  • 51. மநுஸ் - மனதில் நினைத்த மாத்திரத்திலேயே உலக நியதிகளைச் செய்பவர். விஸ்வகர்மாவைப் போல அவர் தனது கருவிகளைக் கொண்டு உலகை உருவாக்கினார். அவர் தனது சிந்தனையால் மட்டுமே படைப்பை ஏற்படுத்துகிறார்.
  • 52. த்வஷ்டா - பெயர்கள், உருவ அமைப்புகள் முதலானவற்றைப் பாகுபாடு செய்பவர். அவதாரங்கள் எடுப்பவர். பிரளய காலத்தில் உலகைச் சுருக்கி தனக்குள் அடக்கிக் கொள்கிறார்.
  • 53. ஸ்த²விஷ்ட²ஸ் - மிகவும் பெரியவர். தனது விருப்பத்தின் பேரில் பிரம்மாண்டமான வடிவங்களை எடுப்பவர். (வராஹ அவதாரத்தில் உள்ள பெரிய பன்றி அல்லது வாமன அவதாரத்தில் திரிவிக்ரமைப் போல)
  • 54. ஸ்த²விரோ - எக்காலத்தும் நிலைத்திருப்பவர்.
  • 55. த்⁴ருவஹ - மாறாமல் நிலையாய் இருப்பவர். நேரம், இடம் முழுவதும் முழுமையாக இருக்கிறார். காலச் சக்கரத்தால் பாதிக்கப்படாத வயதுடையவர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment